MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையின் பிரபல நட்சத்திர விடுதி அடையார் கேட் மூடப்படுகிறது.! வெளியான அறிவிப்பு.! காரணம் என்ன.?

சென்னையின் பிரபல நட்சத்திர விடுதி அடையார் கேட் மூடப்படுகிறது.! வெளியான அறிவிப்பு.! காரணம் என்ன.?

சென்னையின் மிகவும் புகழ்ப்பெற்ற  நட்சத்திர விடுதிகளில் ஒன்றான கிரவுன் பிளாசா அடுத்த மாதத்துடன் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

2 Min read
Ajmal Khan
Published : Nov 26 2023, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நட்சத்திர விடுதி- அடையார் கேட் மூடல்

சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான, பழமையான நட்சத்திர விடுதிகளில் அடையார் கேட் என அழைக்கப்படும் கிரவுன் பிளாசாவும் ஒன்று. நகரின் முக்கியமான இடமான ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தொழிலதிபரான T.T.வாசு அடையார் கேட் எனும் பெயரில் முதன் முதலில் ஹோட்டல் தொடங்கினார்.

அதன் பின்னர் கோயல் குழுமத்திற்கு விற்கப்பட்டது. அதன் பின்னர், இதை வாங்கிய பிரபல ஐடிசி நிறுவனம், பார்க் ஷெரட்டன் எனவும், பின்னர் கிரவுன் பிளாசா எனவும் பெயரை மாற்றியது. எத்தனை பெயர்கள் மாறினாலும், காலங்கள் மாறினாலும்,  இன்றளவும் நட்சத்திர விடுதி அமைந்துள்ள பகுதியை அடையார் கேட் என்றே அழைக்கப்படுகிறது.

24

உலக தலைவர்கள் தங்கிய விடுதி

இந்த நட்சத்திர விடுதியில், 287 அறைகள் உள்ளன. பல தமிழ் திரைப்படங்களின் சூட்டிங் இங்கு நடைபெற்றுள்ளது. மேலும் உலக தலைவர்கள், போப் ஆண்டவர், இந்திய அரசியல் தலைவர்கள் , இந்திய கிரிக்கெட் அணி உட்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இந்த விடுதியில் தங்கியுள்ளனர். அதே நேரத்தில் இந்த விடுதியில் தான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது. 

34
ADMK & DMDK Alliance Likely to be Finalised Meeting Full Video

ADMK & DMDK Alliance Likely to be Finalised Meeting Full Video

அதிமுக- பாஜக- பாமக கூட்டணி

கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக- பாஜகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது இந்த நட்சத்திர விடுதியில் தான், இதனை தொடர்ந்து பாமக, தேமுதிக உடனும் தொகுதி பங்கீடு செய்யப்பட்டது.  இப்படி கடந்த 38 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த நட்சத்திர விடுதி டிசம்பர் 20 ஆம் தேதியுடன் மூடப்படவுள்ளதாக அதன் வாடிக்கையாளர்களுக்கு விடுதி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.
 

44

அடுக்குமாடி குடியிருப்பு

இந்த நட்சத்திர விடுதியை பாஷ்யம் எனும் கட்டுமான நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், விடுதி இடிக்கப்பட்டு சுமார் 130 சொகுசு வீடுகள் கொண்ட சொகுசு வீடுகள் கட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு சொகுசு வீடு சதுர அடிக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை வீதம் விலை நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளதாகவும், அதன்படி ஒரு வீடு குறைந்தபட்சம் ரூ.15 கோடியில் இருந்து அதிகபட்சம் 20 கோடி வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்

Tamilnadu Rain Alert : நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! ஆழ்கடல் மீனவர்கள் கரை திரும்ப அவசர உத்தரவு

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved