MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிமுக- பாஜக கூட்டணியில் புதிய கட்சி.! டெல்லியில் இருந்து ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா

அதிமுக- பாஜக கூட்டணியில் புதிய கட்சி.! டெல்லியில் இருந்து ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. அதேசமயம், அதிமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவுடன் கூட்டணி அமைத்த போதிலும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 03 2025, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, கடந்த 7 வருடமாக தனது கூட்டணியை கட்டி காப்பாற்றி வருகிறது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணியை தொடர திட்டமிட்டுள்ளது. 

மேலும் இந்த கூட்டணியில் புதிதாக மக்கள் நீதி மையம் இணைந்துள்ளது. அடுத்தாக எஸ்டிபிஐ கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக கூட்டணியை வீழ்த்த அசூர பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க அதிமுகவும் காய் நகர்த்துகிறது. அந்த வகையில் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் பாஜகவுடன் முறிந்து போன கூட்டணியை மீண்டும் ஒட்டவைத்துள்ளது அதிமுக,

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : google

தற்போது மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  இஇதனிடையே அதிமுக கூட்டணியில் இணைய முதல் கட்டமாக தவெக தலைவர் விஜய்க்கு தூது அனுப்பப்பட்டது. ஆனால் விஜய் அதிமுக,பாஜக தூண்டிலில் சிக்காமல் நழுவினார். 

அடுத்தாக ஏற்கனவே கூட்டணி அமைத்த தேமுதிக, பாமக மற்றும் அமமுகவிற்கு தங்கள் அணியில் இணைய பேசப்பட்டது. ஆனால் அதிமுக மற்றும் பாஜகவிடம் தங்களுக்கான உரிய முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் ஜனவரி மாதம் தங்களது முடிவை அறிவிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளது இந்த கட்சிகள்,

34
Image Credit : Asianet News

எனவே பலம் வாய்ந்த கூட்டணியை உறுதி செய்ய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நாம் தமிழர் கட்சியும் தனி அணியாகவே களத்தில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக- அதிமுக, கூட்டணி  வலிமைப்படுத்த என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளோடு முக்கிய ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, வானதி சீனிவாசன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மூத்த பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

44
Image Credit : X/@NainarBJP

தமிழகத்தில் பாஜகவை அமைப்பு ரீதியாக பல்வேறு மாவட்டங்களில் பலப்படுத்துவது, எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி , தேர்தலுக்கு முன்பாக பாஜகவின் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாநில மாநாடு ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் திமுகவிற்கு எதிராக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் கட்சிகளை இணைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அதிமுக பாஜக கூட்டணி
எடப்பாடி பழனிசாமி அதிமுக
திமுக கூட்டணி கட்சிகள்
மு. க. ஸ்டாலின்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Related Stories
Recommended image1
அன்புமணிக்கு லாஸ்ட் சான்ஸ்.! ராமதாஸ் எடுத்த முக்கிய முடிவு
Recommended image2
எதிர்பார்த்து காத்திருந்த முதல்வர்! அதெல்லாம் முடியாது! கையை விரித்த விஜய்! தொண்டர்கள் ஷாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved