விஜய்யை மேடையிலே வச்சிக்கிட்டு திமுகவை இப்படி சொல்லிட்டாரே? உதயநிதியை விட்டு வைக்காத ஆதவ் அர்ஜுனா!
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய் மற்றும் திராவிட மாடல் அரசியல் குறித்து சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். சினிமா துறையில் ஒரு நிறுவனத்தின் ஆதிக்கம், 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிப்பு, ஊழல் எதிர்ப்பு போன்ற விஷயங்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.
Ambedkar Book Release Event
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணைபொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து பேசுகையில்: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும் என்றார்.
Aadhav Arjuna
ஒரு பட்டியலினத்தவர் முதல்வராக வரவேண்டும் எனும்போது அதற்காக முதல் குரலாக ஒலித்த குரல் விஜய்யின் குரல். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் 1.40 கோடி தலித்துக்கள் உள்ள நிலையில் இதுவரை ஒரு பொதுத்தொகுதியில் கூட தலித்தை நிறுத்த முடியவில்லை. தலித் மக்கள் கொண்ட இயக்கம் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
Udhayanidhi Stalin
தமிழகத்தில் ஒரு நிறுவனம் ஒட்டு மொத்த சினிமா தொழிலையும் கட்டுப்படுத்தி அரசியல் மூலம் லாபம் ஈட்டுகின்றனர். இன்று வரை அததற்கு ஒரு குரல் இல்லை. இந்த குரல் எங்கிருந்து வர வேண்டும்.ஏன் சினிமா தொழில் ஒரு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என கேள்வி எழுப்பினார். 4000 கோடி ரூபாய் தொழிலை எப்படி ஒரு நிறுவனம் கட்டுப்படுத்த முடிகிறது. ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய சினிமா எப்படி ஒரே நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என உதயநிதியை மறைமுகமாக சாடினார்.
TVK Vijay
தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை. 2026 தேர்தலில் தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. மன்னராட்சியை எதிர்த்தால் சங்கி என்று சொல்கிறார்கள். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். கொள்கைகளை பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்யும் ஊழல் பற்றி எடுத்து கூறுங்கள் என விஜய்க்கு ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள் விடுத்துள்ளார். குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வேங்கைவயலுக்கு தவெக தலைவர் விஜய் செல்ல வேண்டும்.
DMK Government
அரசியலில் இனி நேருக்கு நேராக பேசுவோம். முதுகிற்கு பின்னால் பேச வேண்டாம். பாஜகவிற்கு தமிழகத்தில் 2 சதவீத்திற்கு மேல் ஓட்டு கிடையாது. மதவாதத்தை போல ஊழலையும் நாம் பிரச்சனையாக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா பேசினார்.