MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரமலான் நோன்பு.! இஸ்லாமியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு

ரமலான் நோன்பு.! இஸ்லாமியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு

Fasting in Ramadan: ஏழ்மையாக உள்ள மக்களின் பசியை அறிந்து கொள்ள வாய்ப்பாக இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 17 2026, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரம்ஜான் பண்டிகை
Image Credit : our own

ரம்ஜான் பண்டிகை

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றாக இருப்பது நோன்பு, அந்த வகையில் ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலையில் இருந்து உணவு சாப்பிடாமலும், தண்ணீர் அருந்தாமலும் விரதம் இருப்பது வழக்கம். மாலை நேரத்தில் தான் நோன்பை முடித்து விட்டு உணவு அருந்துவார்கள். ஏழ்மையாக உள்ள மக்களின் பசியை அறிந்து கொள்ள வாய்ப்பாக இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

25
ரமலான் நோன்பு கஞ்சி
Image Credit : X/@arivalayam

ரமலான் நோன்பு கஞ்சி

அந்த வகையில் இந்தாண்டுக்கான நோன்பானது வருகிற வியாழக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறையை தென்பட்டால் நோன்பை கடைப்பிடிப்பார்கள். அன்றைய தினத்தில் ரமலான் மாதத்தில் பள்ளி வாசலில் நோன்பு கஞ்சி வழங்கப்படும். இந்நிலையில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Related image1
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Related image2
பிப்ரவரி 19ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
35
தமிழக அரசு
Image Credit : Google

தமிழக அரசு

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஒவ்வொரு ஆண்டும் புனித இரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2026–ஆம் ஆண்டிலும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

45
இஸ்லாமிய மக்கள்
Image Credit : Google

இஸ்லாமிய மக்கள்

2026–ஆம் ஆண்டு, இரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.

55
8700 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு
Image Credit : Asianet News

8700 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு

பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 20 கோடியே 88 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிப்ரவரி 19ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
எகிறும் எதிர்பார்ப்புகள்.. அதிரும் அறிவிப்புகள்..? இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்
Recommended image3
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Related Stories
Recommended image1
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Recommended image2
பிப்ரவரி 19ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved