MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திடீர் அரசியல்வாதி! அதிமுகவை பற்றி பேச உங்களுக்கு அருகதையே இல்லை! ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுக பதிலடி!

திடீர் அரசியல்வாதி! அதிமுகவை பற்றி பேச உங்களுக்கு அருகதையே இல்லை! ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுக பதிலடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : May 21 2025, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா
Image Credit : our own

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர், தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது அல்லது தனித்து போட்டியிட போகிறதா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா
Image Credit : our own

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என விஜய் அறிக்கை வெளியிட்டார். அதைவிட வேறு என்ன வேண்டும். அரசியல் எதிரி திமுகவுடனும், கொள்கை எதிரி பாஜகவுடனும் கூட்டணி இல்லை. பாஜக. உடன் இருப்பதால் அதிமுகவுடனும் தவெக கூட்டணி அமைக்காது. விஜய்யின் நிலைப்பாட்டை தான் பொதுவெளியில் நாங்கள் தெரிவிக்கிறோம்.

34
அதிமுகவை எதிர்க்காததற்கு இதுதான் காரணம்
Image Credit : our own

அதிமுகவை எதிர்க்காததற்கு இதுதான் காரணம்

அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுக சமீபத்தில் நடந்த பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. அதிகவுக்கு மக்களே நல்ல தண்டனை கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சியை எதிர்ப்பதற்கு எந்த காரணம் இல்லை. அதனால்தான் அதனை எதிர்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி பல தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு கட்சியுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? தவெகவின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதே எங்களின் நிலைபாடு என்று கூறினார்.

44
அதிமுக ஐ.டி. விங் பதிலடி
Image Credit : Google

அதிமுக ஐ.டி. விங் பதிலடி

இந்நிலையில் அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஐ.டி. விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தொழிலதிபராக இருந்து, "திடீர்" அரசியல்வாதியாகி, பல கட்சி தாவுவதில் கைதேர்ந்த வித்தகரான ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுகவை பற்றி பேச எள்ளளவும் அருகதை இல்லை. இன்று த.வெ.க.-வில் அமர்ந்துகொண்டு கருத்து கூறும் நீங்கள், நாளை எந்தக் கட்சியில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை. எனவே, உங்கள் கருத்துக்கு பதில் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
தமிழக வெற்றி கழகம்
அரசியல்
தமிழ்நாடு
திமுக
அதிமுக பாஜக கூட்டணி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு அதிரடி.! 8,000 பேருக்கு அரசு வேலை? எப்போ ஆட்கள் தேர்வு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Recommended image2
Now Playing
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
Recommended image3
Now Playing
கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
Related Stories
Recommended image1
களத்தில் இறங்கிய இபிஎஸ்! வேறு வழியில்லாமல் திமுக இளைஞர் அணி நிர்வாகி நீக்கம்! ஆக்‌ஷனில் இறங்கிய உதயநிதி!
Recommended image2
சபாஷ்! அசத்துடீங்க போங்க! இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved