ஒருவழியாக தமிழகத்தில் கத்திரி வெயில் நிறைவடைகிறது - எப்போது தெரியுமா?
கத்திரி வெயில் இந்த தமிழக மக்களை வாட்டி வதைத்துள்ள நிலையில், வானிலை மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் காலம் நிலவி வருவதால், கோடை வெப்பம் மக்கள் வாட்டி வதைக்கிறது. கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட இந்த ஆண்டு வெப்பமும், அணல் காற்றும் அதிமகாக இருப்பதால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு கோடைக் காலத்தில் மே 4ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை கத்திரி வெயில் நிலவும். சில ஆண்டுகளில் கத்திரி வெயில் இருப்பதே தெரியாமல் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வெயில் தமிழக மக்களை வாட்டி வதைத்தது என்று கூறலாம்.
இந்த ஆண்டு கடந்த மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் உள் மாவட்டங்கள் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் ஒருவழியாக இந்த ஆண்டு கத்திரி வெயில் நாளையுடன் நிறைவடைகிறது.
இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. இருப்பினும் மேலும் சில தினங்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்பதால், பள்ளி திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விபரம்