- Home
- Tamil Nadu News
- திமிரு பிடித்த சீமான் - விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு... முந்தானைக்குள் முடிந்த மனைவி கயல்விழி!
திமிரு பிடித்த சீமான் - விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு... முந்தானைக்குள் முடிந்த மனைவி கயல்விழி!
சீமான் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை நடிகை விஜயலட்சுமி சுமத்தி வரும் நிலையில், அவரது மனைவி பற்றி பலரும் ஆர்வமாக தேடி வருகின்றனர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த, 2013 ஆம் ஆண்டில் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்த சீமான், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து மேடைக்கு மேடை முழங்கி தனது ஆக்ரோஷமான பேச்சுகள் மூலம் இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வரும் சீமானுக்கே சிம்ம சொப்பமனமாக இருப்பவர் நடிகை விஜயலட்சுமி.
வாழ்த்துகள் திரைப்படத்தின் போது, 2007ஆம் ஆண்டில் சீமானுடன் தனக்கு உறவு ஏற்பட்டதாக கூறும் விஜயலட்சுமி, 2011ஆம் ஆண்டில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றி விட்டதாக போலீஸில் புகார் அளித்தார். அது முதல் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடுமையாக வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. சீமானும் அவரது ஆதரவாளர்களும் அளித்து வரும் தொந்திரவு காரணமாக 2020ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயற்சித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் விஜயலட்சுமி.
சீமான் - விஜயலட்சுமி ஆகியோருக்கு இடையே பிரச்சினை சற்று ஓய்ந்தது போல் தெரிந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி இன்று புகார் அளித்துள்ளார். சீமான், தன்னை திருமணம் செய்தது உண்மைதான், அவரால் அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன். அவரை கைது செய்யும் வரை என்னுடைய போராட்டம் தொடரும் எனக் கூறிய அவர், அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், சீமான் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமிரு பிடித்த, அகங்காரம் பிடித்த ஒருத்தருடன் நான் வாழ்ந்து இருக்கிறேன். அந்த திமிரை எப்படி அடக்குவது என்று எங்களுக்கு தெரியும்; அடக்குவோம் என சீமானை நடிகை விஜயலட்சுமி சாடியுள்ளார். விஜயலட்சுமி குற்றம் சாட்டுவது போல சீமானின் திமிரையும், தம்பிகளிடம் பேசும் சீமானின் ஆக்ரோஷத்தையும் ஒருவர் தனது முந்தானைக்குள் அடக்கி வைத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை சீமானின் மனைவி கயல்விழிதான். இந்த தம்பதிக்கு பிரபாகரன் என்ற மகன் இருக்கிறார்.
சீமானின் திருமணம் கடந்த, 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி, சீமான் - கயல்விழி திருமணத்தை நடத்தி வைத்தார். சீமானின் மனைவி கயல்விழி வேறு யாருமில்லை, அதிமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துதான் சீமானின் மனைவி கயல்விழியின் தந்தை.
மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நிர்மலா அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அமுதா, கயல்விழி என்ற மகள்களும் உள்ளனர். காளிமுத்துவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த கடைசி மகள்தான் கயல்விழி. இவரைத்தான் சீமான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழ்நாடு தமிழர்களுக்குத்தான் என்றும், மற்றவர்களை வந்தேறிகள் என கடுமையான விமர்சனம் செய்யும் சீமானின் மனைவி கயல்விழியின் தாய், தெலுங்கு விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதையொட்டி, சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வார்த்தைப்போர் நிலவியது என்பது நினைவுகூரத்தக்கது.