MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 16 நாட்களுக்கு பிறகு வெளியே தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்! முக்கிய பொறுப்பை தூக்கி கொடுத்த விஜய்!

16 நாட்களுக்கு பிறகு வெளியே தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்! முக்கிய பொறுப்பை தூக்கி கொடுத்த விஜய்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார். வந்தவுடன் அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பை விஜய் வழங்கியுள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Oct 14 2025, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்
Image Credit : Google

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்

தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் தவெகவை கடுமையாக சாடியிருந்த சென்னை உயர்நீதிமன்றம், அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

24
தவெக தலைவர்களுக்கு நிம்மதி
Image Credit : Asianet News

தவெக தலைவர்களுக்கு நிம்மதி

மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்த உச்சநீதிமன்றம், சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் கண்டனம் தெரிவித்து இருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தவெக தலைவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் கைது செய்யப்பட்டார்.

16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்

அதே வேளையில் புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் கரூர் சம்பவத்துக்கு பிறகு தலைமறைவாக இருந்து வந்தனர். இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றிய நிலையில், தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் 16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தனர்.

Related Articles

Related image1
கைவிரித்த உயர்நீதிமன்றம்..! உச்சநீதிமன்ற படியேறிய புஸ்ஸி ஆனந்த்..! முன் ஜாமீன் கிடைக்குமா?
Related image2
புஸ்ஸி ஆனந்த் சிக்கினால் தவெக கதை கந்தல்..! முடிவோடு காத்திருக்கும் காவல்துறை..!
34
விஜய்யுடன் ஆலோசனை
Image Credit : our own

விஜய்யுடன் ஆலோசனை

இருவரும் வெளியே வந்தவுடன் தவெக தலைவர் விஜய்யை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர். குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்? 

தவெகவின் எதிர்கால திட்டம் என்ன? விஜய் கரூக்கு பாதிக்கப்பட்டோரை சந்திக்க செல்லும்போது என்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும்? என்பது குறித்து புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

44
புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு
Image Credit : our own

புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார். கரூர் செல்வதற்காக வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார். 

கரூர் சம்பவத்துக்கு புஸ்ஸி ஆனந்த் சரியாக நிர்வகிக்காததே காரணம் என கூறப்படும் நிலையில், விஜய் மீண்டும் அவருக்கு பொறுப்பு வழங்கியுள்ளது தவெகவினர் சிலரே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சாதாரண டீக்கடை வைத்திருந்த ஓபிஎஸ்! மக்கள் பார்த்துட்டு இருக்காங்க! இறங்கி அடிக்கும் செல்லூர் ராஜு!
Recommended image2
தொட்டுப்பார்... சீண்டிப் பார் சவால் என்னாச்சு ஸ்டாலின்..? அம்பலப்படும் உதயநிதி..! அதிமுக சவால்..!
Recommended image3
பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்.! ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Related Stories
Recommended image1
கைவிரித்த உயர்நீதிமன்றம்..! உச்சநீதிமன்ற படியேறிய புஸ்ஸி ஆனந்த்..! முன் ஜாமீன் கிடைக்குமா?
Recommended image2
புஸ்ஸி ஆனந்த் சிக்கினால் தவெக கதை கந்தல்..! முடிவோடு காத்திருக்கும் காவல்துறை..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved