- Home
- Tamil Nadu News
- நோ நோ டாடி பாவம்! மம்மி பாவம்..! ஓவியாவை பச்சை பச்சையா கழுவி ஊற்றும் தவெக தொண்டர்கள்..! கதறும் பிக் பாஸ்..
நோ நோ டாடி பாவம்! மம்மி பாவம்..! ஓவியாவை பச்சை பச்சையா கழுவி ஊற்றும் தவெக தொண்டர்கள்..! கதறும் பிக் பாஸ்..
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று முதல் நபராக கருத்து தெரிவித்த நடிகை ஓவியாவை தவெக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்
கரூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். பிரசாரத்திற்கு பகல் 12 மணிக்கு விஜய் வருவார் என்று கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் காலை முதலே கொத்து கொத்தாக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். ஆனால் அறிவித்ததற்கு மாறாக மாலை 7 மணிக்கு தான் விஜய் பிரசார பகுதிக்கு வந்து சேர்ந்தார்.
பரிதாபமாக பறிபோன 41 உயிர்கள்
விஜய் பேசிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா, கூட்ட நெரிசலுக்கு காரணமான நடிகர் விஜய்யை காவல் துறைியனர் கைது செய்ய வேண்டும் என தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
விஜய்யை கைது செய்ய வேண்டும்.. ஓவிய ஆவேசம்
விபத்து தொடர்பாக தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று அவசர அவசரமாக கருத்து தெரிவித்த ஓவியாவிற்கு எதிராக தவெக தொண்டர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஓவியா, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நான் மீண்டும் ட்விட்டருக்கு வந்தேன்.
After a long break, I came back to Twitter.
After the #Karur incident, I shared my thoughts.I received so many negative comments on my Instagram account from TVK abusers.This is the worst.@ActorVijay, this is not right.
First, tell your TVK party members to respect women. pic.twitter.com/nkjDb1V5nV— Oviya (@oviya__offll) September 28, 2025
பெண்களை மதிக்க சொல்லுங்கள் - ஓவியா கதறல்
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன். டிவிகேயை துஷ்பிரயோகம் செய்பவர்களிடமிருந்து எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் எனக்கு நிறைய எதிர்மறையான கருத்துகள் வந்தன. இது மிக மோசமானது. நடிகர் விஜய், இது சரியல்ல. முதலில், உங்கள் டிவிகே கட்சி உறுப்பினர்களிடம் பெண்களை மதிக்கச் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.