தமிழகம் முழுவதும் 3 டிகிரி அதிகரிக்க போகுது வெப்ப நிலை.! என்ன காரணம்.?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், அதிகாலை பனிப்பொழிவு இருந்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 3 டிகிரி அதிகரிக்க போகுது வெப்ப நிலை.! என்ன காரணம்.?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், பனியானது அதிகாலையில் கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் வாகனங்கள் இயக்குவதற்கே பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. அதே நேரத்தில் காலை 10 மணிக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் மத்தியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இன்னும் கோடை காலம் தொடங்குவதற்கே முன்பே வெயில் உச்சத்தை தொட்டு வருவதால் அடுத்த மாதம் வெயிலை நினைத்தாலே மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
பிப்ரவரியில் கொளுத்தும் வெயில்
இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை உயரவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (17-02-2025 மற்றும் 18-02-2025) நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறண்ட வானிலையே நீடிக்கும்
வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 1 21-02-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் 22-02-2025 மற்றும் 23-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
இன்று (17-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (18-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிக்க காரணம்.?
பருவமழை காலம் மற்றும் குளிர் காலம் முடிந்து தற்போது பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது இதுவே கோடைக்காலம் துவங்குவதன் அறிகுறியாக உள்ளது. அந்த வகையில் பருவநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நகரப்பகுதிகளில் கட்டிடங்களின் அளவு அதிகரிப்பு, மரங்கள், நீர்ப்பரப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் வெப்ப நிலை எப்போதும் இல்லாத வகையில் முன்கூட்டியே அதிகரித்துள்ளது. மேலும் கடல் மீதான காற்றிலும் திசையின் போக்கு மாறி இருப்பதால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது வரும் 20ஆம் தேதி வரை நீடிக்கும்.