இனி தமிழகத்தில் வெயில் தான் கொளுத்தப்போகுது.! வானிலை மையம் அலர்ட்
வடகிழக்குப் பருவமழை முடிவடைந்ததை அடுத்து, தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தென்தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இனி தமிழகத்தில் வெயில் தான் கொளுத்தப்போகுது
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தண்ணீர் நிரம்பியது. இதனையடுத்து வட கிழக்கு பருவமழையானது கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் பனியானது அதிகரித்து காணப்படுகிறது. பிற்பகல் வேளைகளில் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (02-02-2025:) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பனி மூட்டம்
வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் வறண்ட வானிலை
நாளை (03-02-2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 04-02-2025 முதல் 08-02-2025 வரை; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
இன்று (02-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (03-02-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.