MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இன்ஸ்டாவில் விளம்பரம்! சிங்கிள்ஸை சூடேற்றும் இளம்பெண்-பைக் ரைடு செல்ல ரூ4000

டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இன்ஸ்டாவில் விளம்பரம்! சிங்கிள்ஸை சூடேற்றும் இளம்பெண்-பைக் ரைடு செல்ல ரூ4000

எலக்ட்ரானிக் யுகத்தில் சிங்கல்ஸை கவரும் வகையில், சில் டீ குடிக்க 1500, படத்திற்கு செல்ல 2000ஆயிரம் என  டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இன்ஸ்டாவில் விளம்பரம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

2 Min read
Author : Ajmal Khan
Published : May 30 2024, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

இளம் தலைமுறை நவீன வாழ்க்கை

நவ நாகரிக உலகில் எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மொபைல் போனில் வரும் வீடியோக்கள் தான் சற்று பொழுது போக்காக உள்ளது. சிலர் மொபைல் போன் மூலம் தங்களது திறமைகளை காட்டி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகியவர்களும் உண்டு, அதே விடியோவால் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நின்றவர்களும் உள்ளனர். 

28

முன்னேறியவர்களும்- வீழ்ந்தவர்களும்

டிக் டாக் என்ற செயலி மூலம் பாட்டு பாடும் திறமை, நடன திறமையை காண்பித்து பலர் முன்னேறியுள்ளனர். படம் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இதில் ஒரு சிலர் செத்த மூதேவி என திட்டியே பிரபலமடைந்து இன்று லட்சக்கணக்கான அளவிற்கு வருமானத்தை ஈட்டி வருகின்றனர். 

உருவாகிறது ‘மூக்குத்தி அம்மன் 2’; அம்மனாக நடிக்க மறுத்த நயன்... அவர் இடத்தை Replace செய்யப்போகும் நடிகை இவரா?

38
tik tok surya

tik tok surya

ஆபாச சாட்டிங்

மற்றோரு தரப்பிலோ  அறைகுறை ஆடைகளோடு இளைஞர்களை சூடேற்றி லைக்ஸ்களை குவித்தும் சம்பாதித்து வருகின்றனர். முன்பு காதலியை சந்திக்க காத்திருந்து காதல் கடிதம் கொடுத்த காலம் மலையேறிவிட்டது. 

48

ஒன் நைட் ஸ்டாண்ட்

இன்ஸ்டாவில் சந்தித்த அடுத்த நொடி டேட்டிங் என தற்போது நவீன காலமாக மாறிவிட்டது. லிவிங் டூ கெதர் என்ற காலம் கடந்து ஒன் நைட் ஸ்டே என்ற நிலைக்கு இன்றைய தலைமுறை வந்துவிட்டது.இதில் அடுத்தகட்டமாக டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இளம்பெண் இன்ஸ்டாவில் விளம்பரம் செய்து இளைஞர்களை சூடேற்றிய சம்பவம் பரபரபாகியுள்ளது. 

58

டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ்

அந்த வகையில் டெல்லியை சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், சில்லான காபி குடிக்க 1500 ரூபாயும், திரைப்படத்திற்கு சென்று விட்டு இரவு உணவு சாப்பிடுவதற்கு 2000 ரூபாய் எனவும் நிர்ணயித்துள்ளார்.  குடும்பத்தினை சந்தித்து பேசுவதற்கு 3 ஆயிரம் ரூபாய் என ரேட் பிக்ஸ் செய்து  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

68

பை ரைடு செல்ல 4ஆயிரம்

அடுத்ததாக பைக்கில் நீண்ட தூரம் பயணம் செல்வதற்கு 4ஆயிரம் ரூபாயும் எனவும் இதில் கூடுதலாக கையை பிடித்துக்கொள்ளலாம் என கூடுதல் சலுகை அறிவித்துள்ளார். அடுத்ததாக டேட்டிங் சென்றதை சமூக வலைதளத்தில்  போட்டோவாக பதிவிடுவதற்கு 6000 ரூபாய் என ரேட் நிர்ணயித்துள்ளார்.  
 

78

ஒன்றாக சமைத்து சாப்பிட 3500

இதில் அடுத்த கட்டமாக வீட்டில் இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு 3500 ரூபாயும், வெளியில் ஷாப்பிங் செல்வதற்கு 4,500 சாகச பயணம் செல்வதற்கு 5ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளார். வார விடுமுறை நாட்களில் இரண்டு நாட்கள் வெளியூர்  சுற்றுலா செல்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் ஆகும் விலை நிர்ணயித்து அட்டவணை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்துள்ளார் அந்த இளம்பெண்.

TTF Vasan Arrest: மீண்டும் கைதான யூடியூபர் டிடிஎப்.வாசன்.. இந்த முறை எந்த வழக்கில் தெரியுமா?

88

அச்சமடையும் பெற்றோர்

இந்த இன்ஸ்டா வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவிற்கு கீழே அந்த இளம்பெண்ணை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இன்றைய இளைய சமுதாயம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இன்ஸ்டாகிராம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மக்களே உஷார்.. அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை விடாமல் அடிச்சு ஊத்தப்போகுது?
Recommended image2
Tamil News Live today 10 January 2026: மக்களே உஷார்.. அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை விடாமல் அடிச்சு ஊத்தப்போகுது?
Recommended image3
தமிழகத்தில் சனிக்கிழமை அதுவுமா இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved