TTF Vasan Arrest: மீண்டும் கைதான யூடியூபர் டிடிஎப்.வாசன்.. ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்குப்பதிவு
மதுரையில் செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Youtuber TTF Vasan
யூடியூபர் டி.டி.எப்.வாசன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் வைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
TTF Vasan
இந்நிலையில், 45 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் சிறையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் இருந்து வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதனிடையே சமீபத்தில் ஹைவேயில் கார் ஓட்டி சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்து விட்டதாக தனது ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.
இதையும் படிங்க: வாய் கூசும் அளவுக்கு டபுள் மீனிங்! ஆபாச ஆங்கரால் பெண் தற்கொலை முயற்சி!VJ ஸ்வேதாவை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்
TTF Vasan Violate traffic Rules
இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை அஜாக்கிரதையாகவும் கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவதும் அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளதாக மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் அளித்தார்.
TTF Vasan Arrest
இந்த புகாரை அடுத்து அண்ணாநகர் காவல்துறையினர் பைக்ரேஸரான டி.டி.எப். வாசனை கைது செய்தனர். செல்போன் பேசியபடி கார் ஒட்டியதாக கைது நேற்று செய்யப்பட்டிருந்த வாசன் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல், சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் தற்போது மேலும் ஒரு பிரிவாக (308) என்ற ஒரு பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் டிடிஎப் வாசன் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அம்மா என் கர்ப்பத்துக்கு காரணம் எங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டர் தான்! பள்ளியில் வைத்தே பலமுறை பலாத்காரம் செய்தாறு!