2 நாட்கள் தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே
குடியரசு தின விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Train Ticket Cancelling
குடியரசு தினம் சிறப்பு ரயில்
விடுமுறை என்றாலே மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் கொண்டாட்டம் தான். அந்த வகையில் நாளை சனிக்கிழமை இதனை தொடர்ந்து குடியரசு தினத்தையொட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறையாகும். எனவே விடுமுறை நாட்களையொட்டி பொதுமக்கள் வெளியூர் செல்வார்கள் என்பதால் ரயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Republic Day special trains
கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்
அதன்படி (ரயில் எண் 06053/06054 ) சிறப்பு ரயிலானது (ஜனவரி 24ஆம் தேதி) இன்று இரவு 10. 40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கன்னியாகுமரியில் இருந்து வருகிற 26 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு சென்னை தாம்பரத்தை வந்து அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
special trains
இந்த சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்றும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி ஐந்தும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி எட்டும், முன்பதிவு செய்யப்படாத வெட்டி ஒன்றும் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், அரியலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரியை சென்று சேருகிறது.
Chennai Central Thiruvananthapuram train
திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்
இதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் சிறப்பு ரயில் (06057 / 06058) இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது (ஜனவரி 24ஆம் தேதி) இன்று இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து 11 மணி 50 நிமிடங்களுக்கு புறப்பட்டு நாளை மாலை 6 00 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல திருவனந்தபுரத்திலிருந்து வருகிற 26 ஆம் தேதி சிறப்பு ரயில் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடுத்த நாள் வந்து சேர்கிறது. இந்த ரயிலானது சென்ட்ரல், அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், வழியாக கொச்சிவேலியை சென்று சேருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது