MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! இந்த நாளை மிஸ் செய்யாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! இந்த நாளை மிஸ் செய்யாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு

ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 12, 2025 அன்று நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Apr 10 2025, 07:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Tamilnadu ration card : தமிழ்நாட்டில் 37 ஆயிரம் முழு நேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். 
இந்த அட்டை உள்ளவர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் உணவுப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவ கையில் அரிசி, சக்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது. மேலும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. எனவே புதிய அட்டை கேட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
magalir urimai thogai

magalir urimai thogai

ரேஷன் அட்டைக்காக காத்திருக்கும் மக்கள்

ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் புதிதாக ரேஷன் அட்டை பெறுவதற்கு பழைய அட்டையில் உள்ள பெயர்கள் நீக்கம் செய்ய வேண்டும், எனவே இதற்காக உணவு பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு தினந்தோறும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் ரேஷன் அட்டையில் பெயரை சேர்க்க நீக்கம் செய்ய சூப்பர் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

35
Ration card name delete

Ration card name delete

பெயரை சேர்க்க, நீக்க சூப்பர் சான்ஸ்

அதன் படி வருகிற சனிக்கிழமை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளதாகவும், அந்த முகாமில் ஓரே இடத்தில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டு ரேஷன் அட்டையில் உள்ள குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

45
Ration card name delete Special camp

Ration card name delete Special camp

சென்னையில் சிறப்பு முகாம் தேதி அறிவிப்பு

அதன்படி ஏப்ரல் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 12.04.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.

55
Ration card name delete

Ration card name delete

ரேஷன் கடை மீதான புகாரையும் தெரிவிக்கலாம்

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், 

தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்படும். எனவே சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு சட்டமன்றம்
குடும்ப அட்டை
ரேஷன் கடை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved