Savukku : சவுக்கு சங்கரின் குழுவை இயக்கியதே அண்ணாமலை தான்.!! டிஜிபிக்கு பறந்த புகார் கடிதத்தால் பரபரப்பு
சவுக்கு சங்கர், பிலிக்ஸ் ஜெரால்ட், முத்தலிஃப், லியோ, திருஞான சம்மந்தம், அமர்பிரசாத்ரெட்டி, மற்றும் K அண்ணாமலை ஆகியோரின் கடந்த 1 வருட செல் போன் அழைப்புகளை ஆராய்ந்தாலே இவர்களுக்கிடையே உள்ள நெருக்கமான தொடர்புகளின் குட்டு வெளிப்படும் என காண்டிபன் புகார் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் சர்ச்சை பேச்சு
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் காண்டிபன் தமிழக டிஜபியிடம் வழங்கியுள்ள புகார் கடிதத்தில், சமீபத்தில் சங்கரை அழைத்து பேட்டி எடுத்தபோதுதான் தமிழக காவல்துறையில் கண்ணியமிக்க பெண் காவலர்கள், அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தியதுடன்,
அவர்களை காவல்துறை கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயரதிகாரியுடன் தொடர்புபடுத்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அந்த நபருடன் சேர்ந்து அவரது பேட்டியை ஒலிபரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்டையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
முத்தலீப் மீது நடவடிக்கை
ஆனால், இந்த கைது நடவடிக்கைகள் இத்துடன் ஓய்ந்து விடக்கூடாது. இந்த நபர்களுக்கு பல துறைகளில் பல செல்வாக்கு மிக்க இடங்களில் உள்ளவர்கள் தொடர்ந்து தகவல்களை கசிய விட்டும் அரசு ரகசியங்களை சட்டவிரோதமாக வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தியவர்களையும் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிக்க வேண்டும்.
அத்தகைய சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்ட நபர்களில் முக்கியமானவர் சவுக்கு மீடியா நிறுவனத்தில் எடிட்டர் இன் சீஃப் என நியமிக்கப்பட்ட கிரைம் ரிப்போர்ட்டர் என தன்னை அழைத்துக் கொள்ளும் முத்தலீஃப் இந்த நபர் தனக்குள்ள போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி சவுக்கு சங்கர் கைதாவார் என்பதை முன்பே யூகித்து சவுக்கு மீடியாவில் இருந்து தனிப்பட்ட விஷயத்துக்காக விலகுவதாக சொல்லி வெளியேறியவர். சவுக்கு மீடியா யூடியூப் பக்கத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பேட்டியில் இந்த நபர் முக்கியமானவர்.
யார் இந்த திருஞானசம்பந்தம்.?
ஆளுநர் சொல்லும் தகவல்களை ஊடகங்களிடம் கசிய வைக்க சில மூத்த நிருபர்களை இந்த திருஞானசம்பந்தம் பயன்படுத்துவார். அரசு ஆவணங்களை திருடி சவுக்கு சங்கருக்கு முத்தலீஃப் மூலமாக விற்பார். இந்த நபர் ஆளுநர் மாளிகையில் வேலைபார்த்தபடி ஒரு பிஜேபி வார் ரூமை வெளியே நடத்தி வருகிரார். இவருக்கு யார் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்பதை எல்லாம் விசாரித்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.
இந்த திருஞானசம்பந்தம் கவுரவ ஆலோசகர் பதவியில் நியமிக்கப்பட்டவர். ஆனால், ஆளுநரிடம் இருந்து ஆராய்ச்சிக்காக ரூபாய் பத்து லட்சம் வரை நிதி பெற்றுள்ளார். இதை நான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிடைத்த பதிலில் அறிந்தேன். இது பற்றி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
கூட்டாளிகள் யார்.?
இடைத்தரகராக செயல்பட்டு கொண்டிருக்கும் சவுக்கு மீடியாவின் Editor- In-Chief என்று சொல்லிக்கொண்டு திரியும் முத்தலிஃப் லியோ, கவர்னரின் ஊடக கௌரவ ஆலோசகர் என்று கூறிக்கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக சட்டத்திற்கு புறம்பாக, அனைத்து திருட்டுவேலை களை செய்துவரும் திருஞான சம்மந்தம், பாஜகாவின் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல முக்கிய அரசாங்க ஆவணங்களை திருடி வெளியிட்ட இந்த கும்பலை விரைவில் கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் சவுக்கு சங்கர், பிலிக்ஸ் ஜெரால்ட், முத்தலிஃப், லியோ, திருஞான சம்மந்தம், அமர்பிரசாத்ரெட்டி, மற்றும் K அண்ணாமலை ஆகியோரின் கடந்த 1 வருட செல் போன் அழைப்புகளை ஆராய்ந்தாலே இவர்களுக்கிடையே உள்ள நெருக்கமான தொடர்புகளின் குட்டு வெளிப்படும்.
இயக்குவதே அண்ணாமலை தான்..
இவர்கள் கூட்டாக சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செய்த அத்தனை திருட்டு தனங்களும் தமிழக மக்களுக்கு தெரியவரும் இவர்களை இயக்குவதே தமிழக பாஜ தலைவர் அண்ணமலை தான். இவர்கள் செய்வது பத்திரிக்கை தர்மத்திற்கு எதிரான செயல் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
இவர்கள் செய்வது தேச விரோத செயலாகும். ஆகவே, இவ்விஷயுத்தில் காவல் துறை இயக்குநர் அவர்கள் பாரபட்சமின்றி இந்த கும்பலை தீர விசாரித்து, இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக காண்டிபன் தெரிவித்துள்ளார்.