MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? பெண்களுக்கு ஜாக்பாட்.. கூட்டுறவு வங்கிகளில் யாருக்கெல்லாம் 'லக்' அடிக்கும்?

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? பெண்களுக்கு ஜாக்பாட்.. கூட்டுறவு வங்கிகளில் யாருக்கெல்லாம் 'லக்' அடிக்கும்?

நகைக்கடன் தள்ளுபடி பெற சரியான ரேஷன் கார்டு மற்றும் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து வாங்கிய மொத்த நகைக்கடன் அளவு 5 சவரனுக்குள் இருக்க வேண்டும்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 21 2026, 06:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நகைக்கடன் தள்ளுபடி
Image Credit : stockPhoto

நகைக்கடன் தள்ளுபடி

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல்களில் நாயகன் என்றால் அது தேர்தல் அறிக்கை தான். இதனால் திமுக, அதிமுக மற்றும் தவெக தேர்தல் அறிக்கையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது, 5 சவரன் வரையிலான நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்து, சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

24
திமுக, திமுக தேர்தல் அறிக்கை
Image Credit : Asianet News

திமுக, திமுக தேர்தல் அறிக்கை

இதேபோல் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக, அதிமுவின் தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டுறவு வங்கிகளில் மக்கள் போட்டி போட்டு நகைகளை அடகு வைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related Articles

Related image1
தேர்தல் சீக்ரெட்ஸ்... தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 234 தொகுதிகள் உருவானது எப்படி?
Related image2
முடிவுக்கு வரும் திமுக - சிபிஎம் கூட்டணி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
34
என்னென்ன நிபந்தனைகள்?
Image Credit : Asianet News

என்னென்ன நிபந்தனைகள்?

ஒருவேளை இரண்டு திராவிட கட்சிகளும் நகைக்கடன் குறித்த தள்ளுபடியை அறிவித்தால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதால் மக்கள் குஷியாக உள்ளனர். நகைக்கடன் தள்ளுபடி செய்ப்படுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. நகைக்கடன் தள்ளுபடிக்கு குடும்ப அட்டை ஒன்றிற்கு 5 சவரன் (40 கிராம்) அல்லது அதற்குக் குறைவாக அடகு வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

44
ரேஷன் கார்டு, ஆதார் விவரங்கள்
Image Credit : Unsplash

ரேஷன் கார்டு, ஆதார் விவரங்கள்

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே இது பொருந்தும். நகைக்கடன் தள்ளுபடி பெற சரியான ரேஷன் கார்டு மற்றும் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து வாங்கிய மொத்த நகைக்கடன் அளவு 5 சவரனுக்குள் இருக்க வேண்டும். வெவ்வேறு வங்கிகளில் பிரித்து வாங்கியிருந்தாலும், மொத்தம் 5 சவரனைத் தாண்டினால் தள்ளுபடி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது ஒரு யூகம் மட்டுமே. திராவிட கட்சிகள் அதை தேர்தல் அறிக்கையில் தெரிவித்து, அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிட்டு, அதன்பிறகே தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்க நகை
தங்கம்
தமிழ்நாடு
அரசியல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
முடிவுக்கு வரும் திமுக - சிபிஎம் கூட்டணி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Recommended image2
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஞாபகம் இருக்கா... 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிமன்றம்
Recommended image3
திமுகவில் சீனியர்களுக்கு சம்மட்டி அடி..! உதயநிதியின் ஸ்கெட்ச்..! அறிவாலயத்தின் 'க்ளீன் ஸ்வீப்' ஆபரேஷன்
Related Stories
Recommended image1
தேர்தல் சீக்ரெட்ஸ்... தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 234 தொகுதிகள் உருவானது எப்படி?
Recommended image2
முடிவுக்கு வரும் திமுக - சிபிஎம் கூட்டணி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved