- Home
- Tamil Nadu News
- விவசாயிகளுக்கு மாதாமாதம் 3000 ரூபாய்.! ஜாக்பாட் அடிக்குமா.? தமிழக அரசு முடிவு என்ன.?
விவசாயிகளுக்கு மாதாமாதம் 3000 ரூபாய்.! ஜாக்பாட் அடிக்குமா.? தமிழக அரசு முடிவு என்ன.?
2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கை மார்ச் 15 தாக்கல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர், அவை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விவசாயம் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. அந்த வகையில் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் அந்த நாட்டின் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும். எனவே விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் மானிய விலையில் உரங்கள், விதைகள், சம்பா பயிர் காப்பீடு, இலவச மின்சாரம், வறட்சி கால நிவாரணம் என பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் செயல்படுத்தப்படுகிறது.
தமிழக வேளாண் பட்ஜெட்
தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மண்ணைப் பொன்னாக மாற்றும் நம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களது வாழ்வை மேம்படுத்தும் வகையில் 2021-2022-ஆம் ஆண்டு முதல் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையானது ஐந்தாவது முறையாக வரும் மார்ச்-15 ஆம் நாள் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பொதுமக்களிடம் கருத்து கேட்பு
இதன் பொருட்டு, இந்த நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய, பிரத்தியேகமாக உழவர் செயலியில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,
மேலும் tnagribudget2025@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் வேளாண் நிதிநிலையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களைப் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய்
இதனிடையே விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். அதன் படி, விவசாயி உயிரிழந்தால் 25 லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும், மகளிர் உரிமை தொகை வழங்குவது போல் விவசாயிகளுக்கு மாதாமாதம் 3000 ரூபாய் வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே திமுக அரசு தாக்கல் செய்கின்ற கடைசி பட்ஜெட் என்பதால் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்