- Home
- Tamil Nadu News
- 30 சீட்டு: ரூ.300 கோடி..மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி..! பிரேமலதா டிமாண்ட்.. வாயடைத்துப்போன பாஜக..!
30 சீட்டு: ரூ.300 கோடி..மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி..! பிரேமலதா டிமாண்ட்.. வாயடைத்துப்போன பாஜக..!
'’விஜயகாந்தின் முகத்துக்காகத்தான் ஓட்டுப்போட்டார்கள். அண்ணியாருக்கு என்ன மதிப்பு இருக்கிறது? தேமுதிகவின் வலிமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும்’’

சிக்கலில் தேமுதிக- என்.டி.ஏ கூட்டணி
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. ஆளும் திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணி அமைக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை சிக்கலில் உள்ளதாக தகவல்கள்.
இதற்கு காரணம் தேமுதிக தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தான் என கூறப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உறுதியாகி விட்டது. தற்போது தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே மீதம் உள்ள நிலையில், சில கூட்டணி கட்சிகளிடமிருந்து ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை இருந்தாலும், இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் திமுக தலைமையிடம் இருக்கிறது. அதனால் திமுக கூட்டணியில் பெரிய குழப்பம் எதுவுமே இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி
மறுபுறம் அதிமுக தலைமைதான கூட்டணியில் பாஜக, பாமக தமாகா, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக மட்டும் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வருகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும் தேமுதிகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி இருப்பதாக பாஜக மேலிடம் கருதுகிறது. ஆகையால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணைவது அவசியம் என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மேலிட தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி தேமுதிக தனது கூட்டணி முடிவை அறிவிக்கும் என கூறி இருந்தாலும் கடலூரில் நடைபெற்ற மாநாட்டில் கூட்டணி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் தொடர்ச்சியாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தரப்பினருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், ராஜ்யசபா எம்பி பதவி வழங்க வேண்டும், மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கேட்டு வருகிறது. இதற்கு பதில் அளித்த அதிமுக தரப்பு 10 தொகுதிகள் வரை வழங்க முடியும். தேர்தலுக்குப் பிறகு ராஜசபா சீட் குறித்து பரிசீலனை செய்யலாம் எனக் கூறியுள்ளனர்.
வாயடைத்துப்போன பாஜக
அதிமுகவுக்கே மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில் தேமுதிகவுக்காக பாஜகவுடன் சிபாரிசு செய்ய முடியாத விவகாரத்தை அதிமுக தலைமை, பாஜக மேலிடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இதனையடுத்து டெல்லியில் இருந்தபடியே தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் தொலைபேசி மூலம் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளுங்கள். விரைவில் சென்னை வந்து நேரில் சந்திப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பு உடன்படவில்லை எனக் கூறப்படுகிறது. பிரேமலதாவின் இந்த டிமாண்ட் பாஜக தரப்பை பதற்றமடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நூலிழையில் தோல்வியடைந்தார் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்.
30 சீட்டு... ரூ.300 கோடி- பிரேமலதா டிமாண்ட்
இதுகுறித்து சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள தகவலில், 30 சீட்டு 300 கோடி ரூபாய் கேட்டு வருகிறார் பிரேமலதா. நேற்று காலை முதல் இரவு 9 மணிக்கு பிரேமலதா அவர்கள் பேசும் வரையில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. கேப்டன் உருவாக்கிய கட்சி, உங்கள் கட்சி பெரிதாக இருந்தது. அதை நான் மதிக்கிறேன். இப்போது தேமுதிகவுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது? விஜயகாந்தின் முகத்துக்காகத்தான் ஓட்டுப்போட்டார்கள். அண்ணியாருக்கு என்ன மதிப்பு இருக்கிறது? தேமுதிகவின் வலிமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
