- Home
- Tamil Nadu News
- டாஸ்மாக் கடைகள் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு
டாஸ்மாக் கடைகள் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு
TASMAC holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் டிசம்பர் 12 முதல் 14 தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tasmac Shop
வருமானத்தை கொடுக்கும் டாஸ்மாக்
மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் தினந்தோறும் 120 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் வருகிறது. இந்த நிதி மூலம் பல மக்கள் நல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
ஒரு பக்கம் மதுவிற்கு எதிரான போராட்டங்கள் நடத்தினாலும் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை தினந்தோறும் புதிய உச்சத்தை வருகிறது. இதனிடையே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என விஷேச நாட்களில் கூட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை இல்லை.
Liquor shops closed
டாஸ்மாக் விடுமுறை நாட்கள்
அதே நேரம் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மிலாடி நபி உள்ளிட்ட 8 நாட்களுக்கு மட்டுமே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் குருபூஜை நாட்கள், கோயில், மசூதி, தேவாலய விழாக்களின் நேரத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் வருகிற 12ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
tiruvannamalai temple
திருவண்ணாமலை தீப விழா
அதன் படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் டிசம்பர் 10ம் தேதி நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து வரும் 13-ம் தேதி அண்ணமலையார் கோயில் கருவறையில் அதிகாலையில்பரணி தீபமும், கோயில் பின்புறம் உள்ள 2ஆயிரத்து 668 அடி உயர மலையின் மாலை நேரத்தில் மீது மகாதீபமும் ஏற்றப்படும். இந்த விழாவில் பங்கேற்க பல ஊர்களில் இருந்தும் பல லட்சம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
tiruvannamalai deepam
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.