புதுசு கண்ணா புதுசு.! பள்ளிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- துள்ளி குதிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள்
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் 100 பள்ளிகளை தேர்ந்தெடுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
school student
மாணவர்களும் பள்ளிகளும்
பள்ளி தான் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும் முக்கிய இடமாக உள்ளது. எனவே தான் கல்வி கற்ற இடங்களை மாணவர்கள் எந்த நிலைக்கு சென்றாலும் மறக்க மாட்டார்கள். அதிலும் தாம் படித்த பள்ளியின் வகுப்பறை, மேஜை, விளையாட்டு மைதானம், பூங்கா என அனைத்திலும் ஒவ்வொரு நினைவிருக்கும். அந்த வகையில் பள்ளியை தூய்மையாக வைத்திருப்பதில் மாணவர்களின் பங்கு முக்கியமானதாகும். இந்த நிலையில் மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், பசுமைப்பள்ளி திட்டமானது தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது.
school student
பசுமை பள்ளி திட்டம்
அந்த வகையில், பசுமை பள்ளி திட்டம் என்பது, இது ஒரு சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பாகும், இந்த திட்டமானது கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கொண்டு காய்கறி தோட்டம் உருவாக்குவது, நீர் பயன்பாட்டை குறைப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு, மக்கும் உரம் தயாரிப்பு, கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Green school
பசுமை பள்ளி திட்டம் நிதி ஒதுக்கீடு
இந்த திட்டத்தின் மூலம் 500 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டத்திற்காக கடந்த 2022 - 2023ஆம் ஆண்டுகளில் 25 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.20 லட்சம் மதிப்பில் பசுமை பள்ளி திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் முதல்முறையாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து 2023-2024-ஆம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு சுமாா் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Green school
100 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம்
இந்தநிலையில் 2024- 2025ஆம் ஆண்டில் 100 பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி 100 பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தலா 20 லட்சம் வீதம் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.