MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TNEB: 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு! மின்வாரிய அதிகாரிகளின் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பு இல்லை! ஊழல் ஆதாரங்களை அழிக்க நடந்த சதியா?

TNEB: 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு! மின்வாரிய அதிகாரிகளின் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பு இல்லை! ஊழல் ஆதாரங்களை அழிக்க நடந்த சதியா?

Hard Disks Stolen: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில், நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர் விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போயுள்ளன. இது ஊழல் ஆதாரங்களை அழிக்கும் சதியாக இருக்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 04 2026, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சென்னை மின்வாரியத் தலைமையகம்
Image Credit : Asianet News

சென்னை மின்வாரியத் தலைமையகம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் காணவில்லை என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல் முதல் டெண்டர், ரகசிய ஆவணங்கள் வரை இருப்பதாகவும், இந்த திருட்டு கடந்த மே 16, 17-ம் தேதிகளில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்த திருட்டு நடந்திருக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
18 ஹார்டி டிஸ்க்குகள் திருட்டு
Image Credit : Asianet News

18 ஹார்டி டிஸ்க்குகள் திருட்டு

அதில், சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கணினிகளில் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 18 ஹார்டி டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசுத்துறை அலுவலகத்திலிருந்து மிக முக்கியமான தரவுகள் திருடப்பட்டிருப்பதும், அதற்கு சாதகமான சூழல் நீண்டகாலமாக உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.

Related Articles

Related image1
Tamilnadu Power Cut: போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ லிஸ்ட்!
Related image2
Heavy Rain: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்! விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! கோவை, சென்னையின் நிலை என்ன?
35
அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை
Image Credit : Asianet News

அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை

திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள், ஏற்கனவே நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பதால், மின்சார வாரியத்தில் ஏற்கனவே நடைபெற்ற ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக நடந்த சதியாக இருக்கக்கூடும் என்று ஐயங்கள் எழுந்துள்ளன. மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக கூறப்படும் போதிலும், இதுவரை 8 ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனதாக மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் 18-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள் காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்தத் திருட்டு நடந்திருக்க முடியாது.

45
கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை
Image Credit : our own

கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை

தமிழ்நாட்டின் மிக முக்கியமான 10 அரசு அலுவலகங்களை பட்டியலிட்டால் அதில் மின்சார வாரியத் தலைமை அலுவலகமும் கண்டிப்பாக இடம் பெறும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாகவே கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை என்றும், தரகர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

55
ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்?
Image Credit : Asianet News

ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்?

தமிழ்நாட்டில் அதிக ஊழல் நடைபெறும் துறைகளில் மின்துறை மிகவும் முக்கியமானது. அதனால் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் இவ்வாறு செய்யப்பட்டதா? ஐந்தாண்டுகளுக்கு மேலாக கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
எங்கள் சின்னத்தில் போட்டியிடவே விருப்பம்; ஏன் முடியவில்லை? துரை வைகோ பதில்!
Recommended image2
12th Mark Sheet Corrections: ஜூன் 8 வரைக்கும் தான் டைம்..! பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் திருத்தத்திற்கு கடைசி வாய்ப்பு!
Recommended image3
Tamilnadu Power Cut: போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ லிஸ்ட்!
Related Stories
Recommended image1
Tamilnadu Power Cut: போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ லிஸ்ட்!
Recommended image2
Heavy Rain: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்! விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! கோவை, சென்னையின் நிலை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved