- Home
- Tamil Nadu News
- 10-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்? பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?
10-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்? பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழ்நாட்டில் 12, 11, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து காணலாம்.

12th public exam Result
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதியும், மே 19ம் தேதியும் வெளியாக உள்ளது.
10th Public Exam
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகின்றனர்.
இதையும் படிங்க: 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தம் பணி தொடங்கியது! பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?
Exam Centers
4,113 தேர்வு மையங்கள்
இவர்களுக்கு தேர்வு எழுத 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களுக்கான தேர்வு பணியினை கண்காணிக்க 4858 பறக்கும் படைகளும்,48,426 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
10th paper correction
விடைத்தாள் திருத்தும் பணி
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 8 நாட்கள் விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெறுகின்றன. அதன் பின்னர் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இது தான் லாஸ்ட் வார்னிங்! ஆசிரியர்கள் மட்டுமல்ல தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
10th public Exam Result
தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்ளுவது எப்படி?
தமிழ்நாடு பொதுத்தேர்வு மாணவர்கள் அதிகாரப்பூர்வ www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.