- Home
- Tamil Nadu News
- பெண்களுக்கு குஷியோ குஷி.! ஒரு லட்சம் ரூபாயை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.! வெளியான அறிவிப்பு
பெண்களுக்கு குஷியோ குஷி.! ஒரு லட்சம் ரூபாயை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.! வெளியான அறிவிப்பு
சட்டமன்றத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிற்பயிற்சி நிலைய மேம்பாடு, கட்டுமான தொழிலாளர் நலன் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

New schemes of the Labor Welfare Department : தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று தொழிலாளர் நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அந்த வகையில்
அறிவிப்பு எண் 1
1. திருக்குவளை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் தங்கி பயிலும் வண்ணம் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய மாணவர் விடுதி கட்டடம் கட்டப்படும்.
அறிவிப்பு எண்.2
தமிழ்நாட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் திறன் பயிற்சி பெறுவதற்கான சூழலை மேம்படுத்தும் பொருட்டு, 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் பழைய கட்டடங்களின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் 67 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
Tamil Nadu labour schemes
தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விடுதிகள்
அறிவிப்பு எண்.3
தொலைதுரப் பகுதிகளிலிருந்து வந்து பயிலும் மாணவர்களின் வசதிக்காக, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலுள்ள 50 விடுதிகள் 22 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
அறிவிப்பு எண்.4
கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங்கள் 20 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
construction worker welfare
5 இலட்சம் டூ 8 இலட்சம் ரூபாயாக உயர்வு
அறிவிப்பு எண்.5
கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக இருந்து 60 வயது பூர்த்தி அடைந்து, குடும்பத்தினரின் கவனிப்பும் பராமரிப்பும் இல்லாத, கட்டுமானத் தொழிலாளர்கள் தலா 50 நபர்கள் தங்கும் வகையில் உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் சென்னையில் இரண்டு முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும்.
அறிவிப்பு எண்.6
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை 5 இலட்சம் ரூபாயிலிருந்து 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ITI infrastructure
கல்வி உதவித்தொகை
அறிவிப்பு எண்.7
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைகளோடு கூடுதலாக, செவிலியர் (Nursing) பட்டயப் படிப்பு பயில 3 ஆயிரம் ரூபாய், உணவு தயாரித்தல் மற்றும் சேவை (Catering and Services) பட்டயப் படிப்பு பயில 3 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்.
அறிவிப்பு எண்.8
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முறையான பட்டப்படிப்பு, முறையான பட்ட மேற்படிப்பு, தொழிற் கல்வி பட்டப்படிப்பு மற்றும் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு போன்ற உயர்கல்வி பயில தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை கூடுதலாக ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
1 lakh subsidy buy own auto
ஆட்டோ வாங்க ஒரு லட்சம் ரூபாய் மானியம்
அறிவிப்பு எண்.9
பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் நேர்வில் ஒரு கல்வி ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அறிவிப்பு எண்.10
பெண்கள் தன்னிம்பிக்கையோடு ஆட்டோ ஓட்டும் சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற்வதை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் / திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக புதிய ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
unorganized sector benefits
ஊதியத்தோடு பயிற்சி
அறிவிப்பு எண்.11
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த, கட்டுமான வேலை, கம்பி வளைப்பு வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல தொழில் இனங்களில் எழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் ஊதியத்துடன், 50,000 தொழிலாளர்களுக்கு ரூபாய் 45 கோடியே 21 இலட்சம் செலவில் வழங்கப்படும்.