- Home
- Tamil Nadu News
- இவ்வளவு கம்மியான வட்டியா.!! மகளிர்களுக்கு உடனே ரூ.1.25 லட்சம்- அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
இவ்வளவு கம்மியான வட்டியா.!! மகளிர்களுக்கு உடனே ரூ.1.25 லட்சம்- அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
தமிழக அரசு சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரை கடன் வழங்குகிறது. கடன் பெற தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை அறிய தொடர்ந்து படியுங்கள்.

Women self help group loan
தமிழக அரசு மகளிர் மற்றும் பிற பிரிவினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் முக்கியமாக பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO) மூலம் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழுக்கடன் திட்டத்தில் ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கடன் உதவியை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் என்ன.?
- பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
- வயது: 18-60 வரை
- குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
- சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை
- சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர் மற்றும் ஆடவருக்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது.
கடன் உதவி - வட்டி விகிதிகம்
- குழு உறுப்பினர்கள் ஒருவருக்கு அதிகப்பட்சம் ரூ. 1.25 லட்சம்.
- ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம்.
- திரும்ப செலுத்தும் காலம் 2 1/2 ஆண்டுகள்.
- ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டும்.
- குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
- அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.
www.tabcedco.tn.gov.in
- கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
மாவட்ட/ மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள்/கூட்டுறவு கடன் சங்கங்கள். ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்