- Home
- Tamil Nadu News
- விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1.20 லட்சம்.! ரொம்ப கம்மி வட்டி- தமிழக அரசின் குஷியான அறிவிப்பு
விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1.20 லட்சம்.! ரொம்ப கம்மி வட்டி- தமிழக அரசின் குஷியான அறிவிப்பு
Tamil Nadu milch cow loan : தமிழக அரசு, கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கறவை மாடுகள் வாங்க கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில், தகுதியான பயனாளிகளுக்கு 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கான திட்டங்கள்
விவசாயிகளுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் மானிய கடன் உதவி திட்டங்கள், கடன் தள்ளுபடி திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தமிழக அரசு, கால்நடை வளர்ப்போர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் முக்கியமாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TABCEDCO) மூலம் நடத்தப்படுகிறது. இது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு முக்கியமாக உதவியாக அமைகிறது.
கறவை மாடுகள் வாங்க கடன் உதவி
இந்த திட்டமானது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) /மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ. 1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ. 60,000 வழங்கப்படும். கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து, பால் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடன் பெற வழிமுறைகள்- நிபந்தனைகள்
திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்
ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம்
பயனாளியின் பங்கு 5 சதவீதம்
தகுதிகள் :
பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
வயது: 18 -60 வரை
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை
உங்கள் உள்ளூர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்தால், அங்கு விண்ணப்பப் படிவத்தைப் பெறுங்கள்.
ஆவணங்கள்: ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள், உறுப்பினர் சான்று, வருமான சான்று (பிற்படுத்தப்பட்டோருக்கு) போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப சமர்ப்பிப்பு: அருகிலுள்ள ஆவின் அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடன் உடனடியாக வழங்கப்படும்.
தொடர்புக்கு: அருகிலுள்ள கால்நடை பராமரிப்பு அலுவலகம் அல்லது TABCEDCO அலுவலகத்தை (https://tabcedco.tn.gov.in) தொடர்பு கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் :
சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்