பிரம்மிக்கவைக்கும் சென்னை விமானநிலையத்தின் புதிய முனையம்! 8ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த கட்டிடம் தொடர்பான பிரம்மிக்க வைக்கும் படங்கள் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்த புதிய முனையம் சென்னையின் உள் கட்டமைப்புக்கு கூடுதல் வலுசேர்க்கும் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தின் எதிர்கால போக்குவரத்து நெரிசல், மக்கள் பயன்பாடு, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படியில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் 2 மற்றும் 3 ஆகியவை இடிக்கப்பட்டு புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு விரைவில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தின் மூலம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் சர்வதேச தரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த டென்மினலை பிரதமர் மோடி வரும் 8ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த முனையத்திலை அமைகப்பட்டுள்ள பல்வேறு நவீன வசதிகள் அனைவருக்குமான விமான பயனத்தை மேம்படுத்தும் என்பது நிச்சயம்.
சென்னை விமானநிலையத்தின் புதிய முனையம் மூலம் பயணிகள் சேவைத்திறன் ஆண்டுக்கு 2.3 கோடியில் இருந்து 3.5 கோடியாக அதிகரிக்கும்.
புதிய விமான நிலையத்தின் தரைத்தளத்தில் ரங்கோலி கோலம் போன்ற வடிவமைப்புகள் தரையில் பெயிண்ட் மூலம் மிகப் பெரிய அளவில் வரையப்பட்டுள்ளன.
தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் வகையில் தமிழ் இசை நாட்டியம் நாடகம் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் குறித்த விளக்க படங்களும் விமான நிலையத்தின் புதிய முனையத்தில் வைக்கப்பட்டுள்ளன.