தளபதி விஜய்யின் கட்சி கொடி வெளியானது!
தளபதி விஜய் வரும் வியாழக்கிழமை அன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது விஜயின் கட்சி அலுவலகத்தில் அவருடைய முகம் பதிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடி ஏற்றப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Thalapathy Vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய், நடிப்பை தாண்டி அரசியலிலும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அதன்படி தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், இந்த படம் வெளியான கையோடு தன்னுடைய 69 ஆவது படத்தில் நடித்த ஒரு பிளான் வைத்திருந்தாலும், அதற்கு முன்னதாக தன்னுடைய கட்சியை வலுப்படுத்த முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
Vijay Manaadu Details
ஏற்கனவே திருச்சியில் விஜய் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்ட நிலையில், அது ஒரு சில கட்சிகளின் சூழ்ச்சியால் நடைபெறாமல் முறியடிக்கப்பட்டு நிலையில், சென்னையிலேயே மாநாடு ஒன்றை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
'தங்கமகள்' சீரியலை தொடர்ந்து... யுவன் மயில்சாமி என்ட்ரி கொடுக்கும் சூப்பர் ஹிட் சீரியல்!
TVK Party Flag
மாநாட்டு முன்னர், தன்னுடைய கட்சி கொடியை அறிவிக்க முடிவு செய்துள்ளார் விஜய். அதன்படி வரும் வியாழக்கிழமை அன்று, நடிகர் விஜய் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். இதற்காக த.வெ.க கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
Vijay in Panaiyur Party Office
இந்நிலையில் இன்று மாலை தன்னுடைய புதிய காரில், நீலாங்கரையில் உள்ள கட்சி அலுவலகம் வந்த நடிகர் விஜய், கட்சி கொடியை அறிமுகம் செய்வதற்காக வைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி த.வெ.க கொடி மஞ்சள் நிறத்தில், விஜயின் முகம் பதிக்கப்பட்டு உள்ளது.
25 முறை ரிஜெக்ஷன்ஸ்; வலிகள் நிறைந்த ராஷ்மிகாவின் திரையுலக பின்னணி!
Thalapathy Vijay Political Party Flag
இதைத்தொடர்ந்து விஜய் காரில் வந்து இறங்க, அவரை புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் நிற உடை அணிந்து உள்ளே அழைத்துப் போகும் சில காட்சிகளும் வெளியாகி உள்ளன. மங்களகரமாக விஜய் மஞ்சள் நிறத்தில் தன்னுடைய கொடியை தேர்வு செய்துள்ளார். மேலும் நடுவில் வட்டமாக விஜயின் புகைப்படம் இதில் இடம்பெற்றுள்ளது. அதை நேரத்தில் கட்சியின் சின்னம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கட்சியின் சின்னத்தோடு கொடி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது போல் அல்லாமல் விஜயின் முகத்தோடு கொடியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.