சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி! இன்று நாளை மின்சார ரயில் சேவை ரத்து!
பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக இன்று மற்றும் நாளை 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

மின்சார ரயில் சேவை
சென்னை மக்களுக்கு போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது மின்சார ரயில் சேவை தான். எந்த ஒரு போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையலாம். குறிப்பாக புறநகர் இணைப்பதில் மினசார ரயில் சேவைக்கு முக்கிய பங்கு ஒன்று. பேருந்தை விட குறைவான கட்டணம் என்பதால் அதிகளவில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வர்கள் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.
பராமரிப்பு பணிகள்
இந்நிலையில், பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக இன்று மற்றும் நாளை 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கு மாற்றாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 ரயில்கள் ரத்து
இதில், பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 19 புறகர் ரயில்கள் முழுவதுமாகவும், 2 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
2 நாட்கள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், சென்னை கடற்கரை - எண்ணூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மொத்தமாக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.