400 மொழிகளில் எழுதும், படிக்கும் 19 வயது சென்னை பையன்!
19 வயதான சென்னை இளைஞர் மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கவும் எழுதவும் தட்டச்சு செய்யவும் முடியும். 46 மொழிகளில் சரளமாகப் பேசும் இவர், பன்மொழித் திறமையால் உலகப் புகழ் பெற்றுள்ளார். 8 வயதில் பன்மொழி தட்டச்சுக்கான உலக சாதனையைப் படைத்த இவர், பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

Mahmood Akram
19 வயதான மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கவும் எழுதவும் தட்டச்சு செய்யவும் முடியும். 46 மொழிகளில் சரளமாகப் பேசவும் செய்வார்! சென்னையைச் சேர்ந்த மஹ்மூத் அக்ரம் தனது பன்மொழித் திறமையின் மூலம் உலகப் புகழ் பெற்றுள்ளார்.
400 languages
மஹ்மூத் அக்ரமின் தந்தை ஷில்பியும் மொழிகளைக் கற்பதில் ஆர்வமுள்ளவர். அவர் 16 மொழிகள் அறிந்தவர். மொழியைத் தடையாக உணரக்கூடாது என்பதற்காக தனது மகனை பல மொழிகளைக் கற்கச் செய்துள்ளார்.
மஹ்மூத் அக்ரம் வெறும் 6 நாட்களில் ஆங்கில எழுத்துக்களையும், 3 வாரங்களில் தமிழ் எழுத்துக்களையும் கற்றுக்கொண்டுவிட்டார். தனது மொழித்திறன் மூலம் பல சாதனைகளும் படைத்துள்ளார்.
8 வயதில் பன்மொழி தட்டச்சுக்கான உலக சாதனையைப் படைத்தார். 10 வயதில் 20 மொழிகளில் தேசிய கீதம் எழுதி அசத்தினார். 12 வயதில் 400 மொழிகளில் தேர்ச்சி பெற்று உலக சாதனை நிகழ்த்தினார்.
Speaks 46 languages
இந்தியாவில் மொழிகளைக் கற்பிக்கும் பள்ளி கிடைக்காததால், மஹ்மூத் அக்ரம் ஆன்லைனில் படிக்கத் தொடங்கினார். ஆஸ்திரியாவின் டானூப் சர்வதேசப் பள்ளியில் உதவித்தொகை பெற்றார்.
மஹ்மூத் அக்ரம் ஒரே நேரத்தில் 3 பட்டங்களுக்குப் படிக்கிறார். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் மொழியியல் படிக்கிறார். பி.ஏ. ஆங்கில இலக்கியமும் அனிமேஷனும் அழகப்பா பல்கலையில் படிக்கிறார்.
மஹ்மூத் அக்ரம் முதலில் பல மொழிகளில் எழுதவும் படிக்கவும் மட்டுமே கற்றுக்கொண்டார். இப்போது 15 மொழிகளில் சரளமாகப் பேசுகிறார். இன்னும் பல மொழிகளில் பயிற்சி எடுக்கிறார்.
Chennai
தனது மொழித் திறனைப் பேணுவதற்காக, சமூக ஊடகங்களை ரஷ்ய மொழியில் பயன்படுத்துகிறார். டேனிஷ் குறும்படங்களைப் பார்க்கிறார். ஃபேஸ்புக்கில் அரபு மொழி வீடியோக்களைப் பார்க்கிறார்.
மஹ்மூத் அக்ரமின் தாய்மொழி தமிழ்தான். திருக்குறள் போன்ற சிறந்த தமிழ் நூல்களை அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என விரும்புகிறார்.
ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மொழிப் பேராசிரியராக வேண்டும், உலகம் முழுவதும் மொழிகளின் முக்கியத்துவத்தைப் பரப்ப வேண்டும். இதுதான் இவரது லட்சியம்.