இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் ஆலந்தூர், அண்ணா சாலை, குரோம்பேட்டை, எழும்பூர், அயனாவரம், பட்டினம்பாக்கம், சேப்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா நகர், பெரம்பூர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க;- வரும் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில் காலை 7 மணி முதல் 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.