பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை! சென்னையில் எந்த ரயில் நிலையங்களில் இந்த ஸ்பெஷல் வசதி தெரியுமா?
சென்னையில் உள்ள 5 மெட்ரோ ரயில் நிலையங்களில், பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை அறிமுகமாகியுள்ளது.
பெண்கள் எல்லா துறையிலும் கோலோச்சி வரும் நிலையில், சென்னையில் பெண்கள் இயக்கும் ரேபிடோ பைக் வசதி தொடங்கப்பட்டுள்ளது. நந்தனம் மெட்ரோ ரயில்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த வாகன சேவையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும், ரேபிடோ நிறுவனமும் இந்த திட்டத்திற்காக கை கோர்த்துள்ளன.
மெட்ரோ ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த ரேபிடோ பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளது என ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்தார். இந்த சேவை பெண்களால் பெண்களுக்கு உறுதுணையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மட்டுமே இயக்கும் இந்த பைக் சேவை வசதி முதல்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் தான் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையை பொறுத்து எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த சேவை விரிவுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: உங்க சமையலறையில் இந்த 4 பொருட்கள் வெச்சுக்காதீங்க! எந்த பொருள் எப்படி இருந்தால் குடும்பத்திற்கு நல்லது?
இந்த ரேபிடோ பைக் சேவையை ஆண்களும் கூட பதிவு செய்யலாம். டாக்ஸி, ஆட்டோ போன்ற பிற வாகனங்களை பதிவு செய்யும்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், மலிவான விலையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண் பயணிகளிடம் இது குறித்து கேட்டபோது, "பெண் ஓட்டுநர்களுடன் பயணிப்பதால் அசௌகரியங்கள் இல்லை. இது வரவேற்கக் கூடிய நடவடிக்கை" என கூறுகின்றனர். காலப்போக்கில் இந்த சேவை முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் மாறும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: நகங்களின் நிறத்தை என்ன நினைச்சிங்க! அதை வைத்தே உங்க ஆரோக்கியத்தை சொல்லலாம்.. உங்க நகம் எப்படி இருக்கு பாருங்க!