Power Shutdown in Chennai:அடேங்கப்பா.. இன்று சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடை? எங்கெல்லாம் தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கே.கே.நகர்:
ஆழ்வார்திருநகர் விஜயா நகர், கங்கையம்மன் கோயில் தெரு, திருப்பதி நகர், R9 காவல் நிலையம் வளசரவாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
பல்லவரம் தெரசா பள்ளி மெயின் ரோடு, பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு, மூங்கிலரி ஒரு பகுதி, முத்துஷா தெரு, மடிப்பாக்கம் அம்பாள் நகர், பாக்கிய லக்ஷ்மி நகர், புவனேஸ்வரி நகர், அலமேல்புரம், சுதர்சன் நகர், ஸ்ரீதேவி நகர், அம்பிகா நகர், கடப்பேரி அன்னை இந்திரா நகர், சிட்லபாக்கம் வினோபாஜி நகர், மகேஸ்வரி நகர், ஏர்போர்ட் காலனி, நவநீத நகர், ஸ்ரீராம் இரணியம்மன் கோயில், வண்டலூர், ஓட்டேரி, சிங்காரத்தோட்டம், மு.க.ஸ்டாலின் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
மவுண்ட் ரோடு, கனரா வங்கி ஒரு பகுதி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், எஸ்.டி. தாமஸ் மவுண்ட் நார்த் பரேட் சாலை, போலீஸ் குவார்ட்டர்ஸ், அம்பேத்கர் நகர் மடிப்பாக்கம் ஏரிக்கரை, சதாசிவம் நகர், குளக்கரி தெரு, ராஜ்பவன் வண்டிக்காரன் தெரு ஒரு பகுதி, பெரியார் நகர் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
33 வி.கே. விருகம்பாக்கம், 33 வி.கே. பூந்தமல்லி, 33 வி.கே. கோவூர், 33 வி.கே. ஆழ்வார்திருநகர், திருமுடிவாக்கம் சிட்கோ 8வது பிரதான மற்றும் குறுக்கு சாலை, வேலாயுதம் நகர், சதீஷ் நகர், பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், நண்பர்கல் நகர், தேவதாஸ் நகர், மலையம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.