Power Shutdown in Chennai: சீக்கிரமாக வேலை முடிச்சிடுங்க.. சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்தடை..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், தாம்பரம், வியாசர்பாடி, கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
போரூர்:
மாங்காடு நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர், குரு அவென்யூ, மாசிலாமணி நகர், கொழுமணிவாக்கம் பகுதி, ராஜீவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே.நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
ராஜகீழ்பாக்கம், கணேஷ் நகர் பிரதான சாலை, வேளச்சேரி பிரதான சாலை பகுதி, திருமலை நகர், அன்னை இந்திரா நகர், நேருஜி தெரு, சிட்லபாக்கம் பிரதான சாலை.
பல்லாவரம்:
தர்கா சாலை, பெருமாள் நகர், பி.வி வைத்தியலிங்கம் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி:
கல்மண்டபம் கிழக்கு மற்றும் மேற்கு சாலை, செட்டி தெரு, காசி தோட்டம், P.V கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
லேபர் காலனி, நாகிரெட்டி தோட்டம் ராஜ்பவன் TNHB பகுதி, பவானி நகர், அம்பேத்கர் நகர், காந்தியார் தெரு, பாரதியார் தெரு, ஆலந்தூர் மடுவங்கரை 1 முதல் 3வது தெரு, அப்பார் தெரு, கற்பக விநாயகர் கோயில் தெரு, லஸ்கர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.