- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா?எங்க கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா?எங்க கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாநகர், போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அண்ணாநகர்:
காரம்பாக்கம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, லட்சுமி நகர், இந்திரா நகர், வானகரம், டீச்சர்ஸ் காலனி, போரூர் கார்டன் பேஸ் I, II, III, மெட்ரோ நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி, கெருகம்பாக்கம் முழுவதும், மதனந்தபுரத்தின் ஒரு பகுதி, மல்டி தொழிற்சாலை எஸ்டேட், பாரதி நகர், பெல் நகர், ஆர்த்தி தொழிற்பேட்டை, பொன்னியம்மன் கோயில் தெரு, ராமகிருஷ்ணா நகர் அனெக்ஸ், மாதா நகர் மெயின் ரோடு, சந்தோஷ் நகர், முத்துநகர், திருமுடிவாக்கம், கிஷ்கிந்தா பிரதான சாலை, ஷோபா குயின்ஸ் லேன்ட், 12வது 13வது தெரு, திருமுடிவாக்கம் சிட்கோ, செம்பரம்பாக்கம் பனிமலர் மருத்துவக் கல்லூரி, டிரங்க் சாலை, வரதராஜபுரம், காவனூர், ஒண்டி காலனி, கோதண்டராமன் நகர், மானஞ்சேரி, பல்லாவரம் மெயின் ரோடு, மானஞ்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுததிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
ஜெ.ஜெ நகர், எரி ஸ்கீம், துவாரகா குடியிருப்பு, விஜிஎன் ஃபேஸ்-II மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.