Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய ஏரியாக்களில் மின்தடை.. இதோ லிஸ்ட் .!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மயிலாப்பூர்:
பெசன்ட் ரோடு, சண்முகம் ரோடு, தாண்டவராயன் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
MEPZ மல்லிமா வீதி, தெற்கு மற்றும் கிழக்கு மாடத் தெரு, தங்கவேல் தெரு, சிட்லபாக்கம் துரைசாமி நகர், சரஸ்வதி காலனி, ஆர்.ஆர்.நகர், காமராஜர் காலனி, காந்தி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
ஜெய் நகர், குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி, ஆபீசர் காலனி, திருமுடிவாக்கம் முருகன் கோயில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பாலவராயன் குளக்கரை தெரு, ஜகநாதபுரம் தெரு, ஐயப்பன்தாங்கல் மேட்டுத் தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்ரமணி நகர், பிரின்ஸ் அபார்ட்மென்ட் ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் 2வது மெயின் ரோடு, 3வது மெயின் ரோடு, தங்கல் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஐடி காரிடார்:
சிறுசேரி நத்தம் சாலை, மு.க.ஸ்டாலின் தெரு, நாவலூர் மெயின் ரோடு, கிரீன் வுட் சிட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.