Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. முக்கிய பகுதிகளில் 5 நேரம் மின்தடை..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், எழும்பூர், அம்பத்தூர், ஆவடி, அடையார், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மயிலாப்பூர்:
சர்தார் ஜங் கார்டன், மாணிக்க மேஸ்திரி தெரு, பெருமாள் தெரு, பெருமாள் முதலி தெரு, தேவராஜ் தெரு, சூரப்பன் தெரு, சுப்ரமணிய வைத்தியர் தெரு, தம்பு நாய்க்கன் தெரு, தங்கவேல் வைத்தியர் தெரு, சோமு முதலி தெரு, ஆறுமுக ஆச்சாரி தெரு, அய்யாசாமி செட்டி தெரு, தனப்பா செட்டி தெரு, டாக்டர் பெசன்ட் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
எழும்பூர்:
ராமானுஜம் தெரு, விநாயக முதலி தெரு, கொத்தவால் சாவடி, வால்டாக்ஸ் சாலை, பெருமாள் முதலி தெரு, குடோன் தெரு, துளசிங்கம் தெரு, பிகேஜி பகுதி, வீரப்பன் தெரு, கல்யாணபுரம் வீட்டு வசதி வாரியம், வைகுண்ட வைத்தியர் தெரு, அய்யா முதலி தெரு, கோவிந்தப்பா தெரு, கண்ணையா நாயுடு தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
முடிச்சூர் முல்லை நகர், கிருஷ்ணா நகர், மகாலட்சுமி நகர், கம்பர் அவென்யூ, சுவாமி நகர் மடம்பாக்கம் மாருதி நகர், ஏஎல்எஸ் நகர், மாணிக்கம் அவென்யூ, எஸ்ஆர் காலனி கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், விநாயகபுரம், மேற்கு அண்ணாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐடி காரிடார்:
சோழிங்கநல்லூர் திருவள்ளுவர் சாலை, TNHB சிறுச்சேரி சிப்காட் தரமணி, சீனிவாசன் நகர், நேரு நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அண்ணா நகர்:
திருமங்கலம் முழு மெட்ரோ மண்டலம், IOB, வி.ஆர். மால், TNHB குடியிருப்பு, அம்பேத்கர் நகர், மேட்டுகுப்பம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையார்:
பெசன்ட் நகர் பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், ஆசிரியர் காலனி, ஜெயராம் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
மாங்காடு ரகுநாதபுரம் முழுவதும், கொள்ளுமணிவாக்கம் முழுவதும், சீனிவாச நகர், காமாட்சி நகர், அடிஷன் நகர், கே.கே.நகர் கோவூர் நடைபாதை, கண்ணப்பன் நகர், திருவள்ளுவர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
நங்கநல்லூர் நேரு காலனி, TNGO, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் மாங்காளியம்மன் வளைவு, நந்தம்பாக்கம், நசரத்புரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
திருவேற்காடு புல்லியம்பேடு, தேவி நகர், பாலாஜி நகர், லட்சுமி நகர் முகப்பேர் கோல்டன் ஃப்ளாட்ஸ், கோல்டன் காலனி, ஜேஜே நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
ஆவடி:
திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை, சிட்கோ திருமுல்லைவாயல் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.