Power Shutdown in Chennai: சீக்கிரமாக வேலை முடிச்சிடுங்க.. சென்னையில் இந்த பகுதியில் 5 மணிநேரம் மின்தடை..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர். அம்பத்தூர், ஆவடி, அடையாறு, போரூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
கோவிலம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோவில் தெரு, விடுதலை நகர், பொன்னியம்மன் நகர், புதுத்தாங்கல் லட்சுமிபுரம், விஷ்ணு நகர், சுபாஷ் நகர், சர்ச் ரோடு, ஏ.எஸ்.ராஜன் நகர், அனகாபுத்தூர் பம்மல் நல்லதம்பி சாலை, அண்ணாநகர், காந்தி சாலை, தியாகராஜன் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஐடி காரிடார்:
ஈ.டி.எல். ஆனந்தா நகர் 1 முதல் 3வது குறுக்குத் தெருக்கள், விநாயகம் தெரு 1 முதல் 3 வது தெருக்கள், ஆர்.ஈ. நகர், சோழிங்கநல்லூர் பாலாஜி நகர், TNHB, பாரதி நகர், தர்மராஜா கோயில், தரமணி, நேரு நகர் எச்.டி. சர்வீஸ் கே.ஜி 360, நேரு நகர் 2வது பிரதான சாலை, திருவேங்கடம் நகர், கிட்ஸ் பார்க், ஒ.எம்.ஆர் மேற்குப் பகுதி, காரப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையாறு:
டைடல் நகர், சாஸ்திரி நகர், எல்.பி. சாலை, கலாஷேத்ரா சாலை, ஆர்.கே.நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ.
கிண்டி:
ஏ, பி மற்றும் எல் பிளாக் தொழிற்பேட்டை, மூவரசன்பேட்டை, மடிப்பாக்கம், ஐயப்பா நகர், அலமேலுமங்காபுரம், மேடவாக்கம் மெயின் ரோடு, மணிகண்டன் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
எஸ்ஆர்எம்சி ஐயப்பன்தாகல், வி.ஜி.என். நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், வானகரம், ஆபீசர்ஸ் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஆவடி:
ரெட் ஹில்ஸ், விவேக் அக்பர் நகர், ஐயப்பன் கோயில் தெரு, பால கணேஷ் நகர் சோத்துப்பெரும்பேடு, அல்லிமேடு கிராமம், வேட்டைக்கார பாளையம், ஒரக்காடு கிராமம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
ஜெ.ஜெ. நகர் ஏரி ஸ்கீம், வி.ஜி.என். பேஸ் -II, கிழக்கு முகப்பேர் கார்டன் அவென்யூ, திருவள்ளுவர் நகர், முல்லை காலனி, டி.ஏ.வி. பெண்கள் பள்ளிகள் திருவேற்காடு கேந்திரா விஹார், நூம்பல், வி.ஜி.என். மகாலட்சுமி நகர், TNHB அயப்பாக்கம், பிளாட் எண் 1 முதல் 4,000 வரை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கே.கே.நகர்:
பி.டி.ராஜன் சாலை, ஆற்காடு சாலை, வடபழனி, விருகம்பாக்கம், குமரன் காலனி 6வது தெரு, வெங்கடேஸ்வரா தெரு, ஆர்.ஆர்.காலனி லாக்ரிட்டி பகுதி, ராம்ஸ் அபார்ட்மென்ட், ராமசாமி சாலை மகாதேவன் தெரு, அரும்பாக்கம் எஸ்.பி.ஐ. காலனி, பஜனை கோவில் 2வது தெரு, எஸ்.ஏ.எப். கேம்ஸ் விலேஜ் வள்ளளார் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி:
மாதவரம் பெருமாள் கோவில் தெரு மற்றும் தோட்டம், கம்பன் நகர், திருமுருகன் நகர், சகாயம் நகர், தணிகாசலம் நகர், ராஜாஜி தெரு, பழனியப்பா நகர், ஏ,பி,சி,டி காலனி, மாத்தூர் 1, 2, 3 மெயின் ரோடு, எம்எம்டிஏ, இந்தியன் வங்கி மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.