Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் 5 நேரம் மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையாறு, வியாசர்பாடி, போரூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
போரூர்:
கோவூர் பரணிபுத்தூர், கக்கிளிப்பேட்டை, திருமுடிவாக்கம் 5, 6வது, 14 சிட்கோ மெயின் ரோடு, எருமையூர் கிராமம், கிஷ்கிந்தா மெயின் ரோடு, ஷோபா குயின்ஸ் லேண்ட், காவனூர் நாயுடு தெரு, பெரியார் நகர், அம்பேத்கர் நகர், ராஜீவ் காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கே.கே.நகர்:
வடபழனி, ஆழ்வார்திரு நகர், ஆர்.ஆர். காலனி, எஸ்.ஏ.எப் கேம்ஸ் கிராமம், ராமசுவாமி சாலை, விருகம்பாக்கம் துணை மின்நிலையங்களில் இருந்து அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
திருவேற்காடு பி.எச். சாலை, ஏசிஎஸ் மருத்துவமனை & கல்லூரி, வானகரம் சாலை, மாந்தோப்பு சாலை, விவேகானந்தர் தெரு, அயப்பாக்கம் TNHB அயப்பாக்கம் பிளாட் எண் 6,500 முதல் 10,000 வரை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி:
மாதவரம் அன்னபூர்ணா நகர், சுமதி நகர், லட்சுமி நகர், லெதர் எஸ்டேட், ரவி கார்டன், மேத்தா நகர், ஏபிசிடி காலனி, ஸ்டான்லி அம்பேத்கர் நகர், ஹரிநாராயணபுரம், எஸ்.எம். செட்டி தெரு, ஹவுசிங் போர்டு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையாறு:
திருவான்மியூர், காமராஜ் நகர், காஸ்மோபாலிட்டன் காலனி, திருவள்ளுவர் சாலை, சிவசுந்தர் அவென்யூ, ஐஐடி பொன்னியம்மன் கோயில் தெரு, கணபதி அவென்யூ, கோட்டூர், ஏரிக்கரை சாலை 1வது பிரதான சாலை, என்டிடிஐ குடியிருப்பு, ராஜ்பவன் மருதுபாண்டி, கங்கை அம்மன் கோயில் தெரு வேளச்சேரி, தண்டீஸ்வரம் பகுதி, தரமணி, பாலமுருகன் நகர், அண்ணாநகர், விஜிபி செல்வா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.