Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. 5 மணிநேரம் கரண்ட் இருக்காது.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
power cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
கோவிலம்பாக்கம் திருவின் நகர், டிஆர்ஏ ஹோம்ஸ், 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு பம்மல் அண்ணாசாலை, அப்துல்கலாம் சாலை, ஆதாம் சாலை பல்லவரம் மார்ஸ் ஹோட்டல், பல்லவா ஹோட்டல், ரயில் நிலைய சாலை, ஏழுமலை தெரு, தர்கா சாலை, பெருமாள் நகர், டி.என்.எஸ்.சி.பி. சங்கராபுரம், விஜய் அவென்யூ, சித்தாலப்பாக்கம், நவீன் அப்பார்ட்மெண்ட் ஐ.ஏ.எப் பெத்தேல்புரம், ஆனந்தபுரம், எம்ஜிஆர் தெரு, கலைஞர் தெரு, அம்பேத்கர் தெரு, கிறிஸ்துராஜா தெரு ராதா நகர், ஓம்சக்தி நகர், பாத்திமா நகர், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, மாடம்பாக்கம் சாந்தி நிகேதன் காலனி விரிவாக்கம், பாலச்சந்தர் அவென்யூ, பகவதி நகர், லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
மயிலாப்பூர்:
விசாலாட்சி கார்டன் டி.டி.கே சாலை 1வது குறுக்குத் தெரு, பீமன்னா முதலி 1வது மற்றும் 2வது தெரு, ஆனந்தா சாலை, டாக்டர் ரங்கா சாலை, சுப்ரமணியம் தெரு, புனித மேரிஸ் சாலை, ஆர்.ஏ.புரம், ஸ்ரீனிவாசா சாலை, வி.சி கார்டன் 1 முதல் 3வது தெரு, எல்டாம்ஸ் சாலை, பார்த்தசாரதி கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை பிரதான சாலை, பெருமாள் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
அண்ணாநகர் டிவிஎஸ் நகர், பல்லா தெரு, பார்த்தசாரதி தெரு, திருவேற்காடு ராம் நகர், ஆர்.எம்.கே. சுந்தர சோழபுரம், செல்லியம்மன் நகர்.
கே.கே.நகர்:
வடபழனி, விருகம்பாக்கம், ராமாபுரம், கோடம்பாக்கம், ஆழ்வார்திருநகர் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
போரூர்:
மல்டி இன்டஸ்ட்ரில் எஸ்டேட், பாலாஜி நகர், பாரதி நகர், விசாலாட்சி நகர், திருமுடிவாக்கம், திருநீர்மலை மெயின் ரோடு, டெம்பிள் வேவ் குன்றத்தூர், போலீஸ் குடியிருப்பு, சரண்யா நகர், ஐய்யப்பந்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி ரோடு, முருகன் கோவில் தெரு, ஜெ.ஜெ நகர், இந்திரா நகர், சொர்ணபுரி நகர் மாங்காடு ஐனனி நகர், செல்வராஜ் நகர், ஸ்ரீராம் நகர், சாதிக் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஐடி காரிடார்:
தரமணி திருவள்ளுவர் நகர், வால்மீகி தெரு, கண்ணதாசன் தெரு, அன்னை அஞ்சுகம் நகர், ஹீராநந்தினி நாவலூர் காவல் நிலையம் பின்புறம், ஒ.எம்.ஆர் மெயின் ரோடு, ஈ.டி.எல் சாய் நகர் முழுவதும், ஆறுமுகம் அவென்யூ மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி:
சிஎம்பிடிடி, சிஎம்டிஏ, சீனிவாச நகர், நடராஜா நகர், எஎம்.ஆர்.எச் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.