Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், தாம்பரம், எழும்பூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மயிலாப்பூர்:
ஃபோர்ஷோர் எஸ்டேட், சாந்தோம் நெடுஞ்சாலை, டிமாண்டி தெரு, டூமிங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
எழும்பூர்:
குக்ஸ் சாலை, டேங்க் பண்ட் சாலை 1, 2, மற்றும் பிரதான தெரு, கிருஷ்ணதாஸ் சாலை, ஓட்டேரி, ஈடன் கார்டன், கே.எச். சாலை, பிரியதர்ஷினி குடியிருப்பு, சி.ஆர் கார்டன், சின்னதம்பி தெரு, திடீர் நகர், புது மாணிக்கம் தெரு, செல்லப்பா தெரு, வருமான வரித்துறை குடியிருப்பு, சுப்ராயன் தெரு, கே.எச் சாலை. திரு.வி.க தெரு, மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
பெரும்பாக்கம், வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், ஈடிஎல் நாகம்மாள் அவென்யூ, விஜிபி ராஜேஷ் நகர், சிட்லபாக்கம் வைத்தியலிங்க சாலை, ஆபிரகாம்லிங்கம் தெரு, அவ்வை தெரு, தனலட்சுமி நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் பூங்கா தெரு, அன்பு நகர், பாரதியார் தெரு, பெருங்களத்தூர் சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளுவர் தெரு, அமுதம் நகர், ராஜகீழ்பாக்கம் துர்கா காலனி, ராஜாஜி நகர், சித்தலப்பாக்கம், கோவிலஞ்சேரி, மேடவாக்கம் மெயின் ரோடு, மாம்பாக்கம், கடப்பேரி மணிநாயக்கர் தெரு, குளக்கரை தெரு, துர்கா நகர் குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பாரதிதாசன் தெரு, ஐஏஎப் பாரத மாதா தெரு, இளங்கோவன் தெரு, சக்ரவர்த்தி தெரு பல்லாவரம், பஜனை கோயில் தெரு, காமராஜ் நகர், ஈஸ்வரி நகர், சக்தி நகர், பம்மல் மெயின் ரோடு, காமராஜர் நெடுஞ்சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கே.கே.நகர்:
பி.டி.ராஜன் சாலை, விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், கோடம்பாக்கம், கே.கே.நகர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி:
மாதவரம் அன்னபூர்ணா நகர், கிருஷ்ணா நகர், ஐயப்பா நகர் மெயின் ரோடு, ஏழுமலை நகர், வசந்தா நகர், ராஜாஜி சாலை, லெதர் எஸ்டேட், ரவி கார்டன், மேத்தா நகர், ஏ.பி.சி.டி. காலனி, மாத்தூர் 1,2,3 எம்எம்டிஏ மெயின் ரோடு. , இந்தியன் வங்கி, TNHB மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையாறு:
வேளச்சேரி விஜயா நகர், கோல்டன் அவென்யூ, காந்தி சாலை, பிரியா பிளாட், பாரதி நகர் 1 முதல் 5வது தெரு, விஜிபி செல்வா நகர் 1 மற்றும் 2 தெரு, பெசன்ட் நகர் எஸ்பிஐ காலனி, ஜெயராம் அவென்யூ, கொட்டிவாக்கம் பல்கலை நகர், கொட்டிவாக்கம் குப்பம், காமராஜர் சாலை, குமரகுரு 1 முதல் 4 வது தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பொன்னேரி:
பஞ்செட்டி நத்தம், அழிஞ்சிவாக்கம், தச்சூர், வேலம்மாள் அவென்யூ, மாதவரம், பெரவள்ளூர், ஆண்டார்குப்பம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஐடி காரிடார்:
டைட்டல் பார்க், வி.எஸ்.ஐ எஸ்டேட் Phase-I, ஈடிஎல் பிள்ளையார் கோயில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, ஓஎம்ஆர், பெருங்குடி தெற்கு காந்தி தெரு, சோழிங்கநல்லூர் மெஜிஸ்டிக் ரெசிடென்சி, எழில் முகா நகர், எல்காட் அவென்யூ சோழிங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.