Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் 5 மணிநேரம் பவர் கட்! எங்கெல்லாம் தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், தி.நகர், தாம்பரம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மயிலாப்பூர்:
லேடி வெலிங்டன் நமச்சிவாயம் தெரு, சிவராமன் தெரு, திருவல்லிக்கேணி ஹை ரோடு, சிங்கபெருமாள் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தி.நகர்:
மாடல் ஹட்மென்ட் ரோடு, சாதுல்லா தெரு, கேனால் பேங்க் ரோடு, தாமோதரன் தெரு, உஸ்மான் ரோடு, ராமநாதன் தெரு, நந்தனம் எக்ஸ்டன்ஷன், அண்ணாசாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
மடம்பாக்கம் படுவேஞ்சேரி சாலையின் ஒரு பகுதி, சதாசிவம் நகர், பெரியார் நகர், அம்பாள் நகர், பத்மாவதி நகர், திருமகள் நகர், சுதர்சன் நகர், கருமாரியம்மன் நகர், அனந்த நகர், அன்பு நகர், விஜயநகரம் ராதா நகர் ஸ்ரீநிவாசுலு நாயுடு தெரு, தனலட்சுமி தெரு, காமகோட்டி நகர், அய்யப்பன் தெரு, சர்ச் அவென்யூ, சாய்பாபா நகர், ஜெயபால் நகர், IAF வேளச்சேரி மெயின் ரோடு, கிளப் ரோடு, திருவள்ளுவர் தெரு,ஆஞ்சநேயர் தெரு, பெஸ்ட் பார்க் பிளாட்ஸ் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அண்ணா நகர்:
கோயம்பேடு மார்கெட் சேமாத்தம்மன் நகர், பி.எச்.ரோடு, ஆழ்வார்திருநகர், நெற்குன்றம், செந்தமிழ் நகர், பல்லவன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பெரம்பூர்:
காந்தி நகர் ஜிஎன்டி சாலை, கட்டபொம்மன் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, சாந்தி காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கே.கே. நகர்:
பி.டி.ராஜன் சாலை அனைத்து பகுதிகளும், கோடம்பாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர் துணை மின் நிலையங்கள்.
போரூர்:
சிவாஜி நகர், குமார நகர், ராமச்சந்திரா நகர் ஐயப்பன்தாங்கல் மேட்டுத் தெரு, சுப்பையா நகர், சுப்ரமணி நகர், பிரின்ஸ் அபார்ட்மென்ட் மங்காடு, கஜலட்சுமி நகர், சக்தி நகர், ஸ்ரீநிவாசா நகர் எஸ்ஆர்எம்சி தெள்ளியராகரம், ஆதித்தனார் நகர், பெரிய கொளுத்துவாஞ்சேரி, திருமுடிவாக்கம் சிட்கோ மெயின் ரோடு, முருகன் கோவில் மெயின் ரோடு, பண்டாரத் தெரு, ஜகநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ரெட்ஹில்ஸ்:
சோத்துப்பெரும்பேடு குமரன் நகர், நல்லூர், சோழவரம் அம்பேத்கர் நகர், டோல்கேட், காரனோடை, விஜிபி மேடு திருமுல்லைவாயல் கே.கே.நகர், டி.எச்.ரோடு, காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையார்:
பெசன்ட் நகர் அனைத்து பகுதிகளும், காந்தி நகர், வேளச்சேரி, இஞ்சம்பாக்கம் துணை மின் நிலையம்.
Power cut
ஐடி காரிடார்:
சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர், சத்யபாமா பல் மருத்துவக் கல்லூரி, செம்மஞ்சேரி, தரமணி ராமப்பப்பா நகர், எல் & டி சிறுசேரி மெயின் ரோடு, வேல்ஸ் காலேஜ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி:
CMBTT தட்டாங்குளம் சாலை, சாமி நகர், MRH சாலை, அமிர்தம்மாள் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.