Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த பகுதிகளில் 5 நேரம் மின்தடை..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
பல்லாவரம் பிவி வைத்தியலிங்கம் சாலை, ஆர்கேவி அவென்யூ, மாணிக்கம் நகர், பம்மல், பாலாஜி நகர், ஏ.என்.பாண்டியன் தெரு, சித்தளபாக்கம் ஆதிநாத் அவென்யூ, கோபாலபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, புதுத்தாங்கல் பாரதி நகர், காந்தி நகர், ராதா நகர், எஸ்பிஐ காலனி, ஜிஎஸ்டி சர்வீஸ் நகர், பழைய அஸ்தினாபுரம் சாலை, பார்வதி மருத்துவமனை அனகாபுத்தூர், வெங்கடேஸ்வரா நகர், குருசாமி நகர், அருள் நகர், மாடம்பாக்கம் பஜனை கோயில் தெரு, ஜோதி நகர் மெயின் ரோடு, ஆனந்த அவென்யூ, சித்தலப்பாக்கம் ராகவேந்திரா சாலை, எம்எம்டிஏ நகர், கட்டபொம்மன் தெரு, அன்னை சிவகாமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம் பகுதி 1 முதல் 3வது தெரு வரை, ஆபீசர்ஸ் காலனி, கக்கன் நகர், அம்பேத்கர் நகர் ராமாபுரம், ஐபிசி காலனி, கொளப்பாக்கம், முகலிவாக்கம், நெசப்பாக்கம், எம்ஜிஆர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.
போரூர்:
எஸ்ஆர்எம்சி சமயபுரம், காவேரி நகர், தர்மராஜா நகர் கோவூர், குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி விஜிஎன், மட வீதி, திருமுடிவாக்கம் 11, 12 , 13வது பிரதான சாலைகள், திருமுடிவாக்கம் சிட்கோ, பழந்தண்டலம் கிராமம், அண்ணாநகர், பூந்தண்டலம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கே.கே.நகர்:
பி.டி.ராஜன் சாலை, ராமசுவாமி சாலை, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், ஆர்.ஆர்.காலனி, எஸ்ஆர்எம்சி போரூர் துணை மின் நிலையங்கள் மற்றும் கே.கே.நகர்.
ஐடி காரிடார்:
டைடல் பார்க், தரமணி, துரைப்பாக்கம் துணை மின் நிலையங்கள் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி:
மாதவரம் ஜிஎன்டி சாலை, கற்பகம் நகர், பிரகாஷ் நகர் மெயின் ரோடு, எம்ஜிஆர் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.