Power Shutdown in Chennai: மக்களே.. சென்னையில் இந்த பகுதிகளில் 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், எழும்பூர், ஐடி காரிடார் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
power cut
அம்பத்தூர்:
TNHB கொரட்டூர் பாரதி நகர், முகப்பேர் சாலை, MTH சாலை பாடி, கிழக்கு அவென்யூ, சென்ட்ரல் அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
எழும்பூர்:
கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, ஜெகத்தம்மாள் கோயில் தெரு, சேத்பட், பாந்தியன் சாலை, மாண்டீத் சாலை, எத்திராஜ் சாலை, பழைய கமிஷனர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையார்:
காந்தி நகர், பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், ஐஐடி, திருவான்மியூர், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், டைடல் பார்க் துணை மின் நிலையங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஐடி காரிடார்:
பெருங்குடி, இடிஎல், சோழிங்கநல்லூர், தரமணி, துரைப்பாக்கம், டிஎல்எப் துணை மின் நிலையங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.