Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் மட்டும் இன்று 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாசாலை, ஆவடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அண்ணாசாலை:
எல்ஜிஎன் சாலை, மோகன்தாஸ் தெரு, ஜிபி கிராஸ், குப்பமுத்து தெரு, நாகப்ப அய்யர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஆவடி:
திருமுல்லைவாயல் மகளிர் தொழில் பூங்கா, காட்டூர், ஆபிசர் காலனி, காமதேனு நகர், சந்திர சேகர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.