- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? இதோ லிஸ்ட்.!
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? இதோ லிஸ்ட்.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
ஸ்ரீராம் இரணியம்மன் கோவில் எச்டி சர்வீஸ் & எல்டிசிடி சர்வீஸ், வண்டலூர் ஜிஎஸ்டி சாலை, ஓட்டேரி சிங்கரத்தோட்டம் வெங்கடேசபுரம், கணபதி நகர், எம்.கே. ஸ்டாலின் தெரு, பெரும்பாக்கம் மெயின் ரோடு, நூக்கம்பாளையம் மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மயிலாப்பூர்:
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, அண்ணாசாலை, கிரீம்ஸ் சாலை, ஜி.என். செட்டி சாலை, லாயிட்ஸ் சாலை, வித்யோதயா சாலை, ஜி.கே.புரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
பாடி பார்க் சாலை, யு.ஆர். நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
ராமாபுரம் முகலிவாக்கம், பூந்தமல்லி பிரதான சாலை, கிருஷ்ணவேணி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, மணப்பாக்கம், அம்பேத்கர் நகர், சத்யா நகர், அஸ்தலட்சுமி அவென்யூ, தில்லைகங்கா நகர் புழுதிவாக்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, சுவாமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.