- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் பவர் கட்.. இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் பவர் கட்.. இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணா நகர், அடையார், தி.நகர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அண்ணா நகர்:
வடக்கு மதுரவாயல், ஆலப்பாக்கம் முழுவதும், போரூர் கார்டன் ஒரு பகுதி, வானகரத்தின் ஒரு பகுதி.
உயர் நீதிமன்றம் :
தம்பு செட்டி தெரு, லிங்கி செட்டி தெரு, அங்கப்பன் தெரு, இயேசு அழைக்கிறார், இந்தியன் வங்கி-I & III, என்.எஸ்.சி. போஸ் சாலை, மலையப் பெருமாள் தெரு, ராஜா அண்ணாமலை மன்றம், எஸ்பிளனேடு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
power cut
தி.நகர்:
எம்ஆர்சி நகர், ஆர்.ஏ. புரம், கற்பகம் அவென்யூ, சாந்தோம் நெடுஞ்சாலை, அறிஞர் அண்ணாநகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
எண்ணூர்:
கத்திவாக்கம், நேரு நகர், அண்ணாநகர், சிவன் படை வீதி, காமராஜ் நகர், தாழங்குப்பம், ஈடிபிஎஸ் குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
முடிச்சூர்:
கேப்டன் சாய்குமார் நகர், சாரங்கா அவென்யூ, காமராஜ் நெடுஞ்சாலை, அன்னை இந்திரா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையார்:
வேளச்சேரி லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு, எம்.ஜி.ஆர் நகர், தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு, ராம்ஸ் பிளாட், ஜனதாபுரி 1வது மெயின் ரோடு, கோஹினூர், பிஸ்மில்லா நகர், ஈ.சி.ஆர் வெட்டுவான்கனி மெயின் ரோடு, கபாலீஸ்வரர் நகர் 3வது மற்றும் 4வது மெயின் ரோடு, ஈஞ்சம்பாக்கம் அல்லிக்குளம், வடக்கு மற்றும் தெற்கு பெத்தல் நகர், கங்கையம்மன் கோவில் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கஸ்தூரி பாய் நகர், நீலாங்கரை குப்பம், பனையூர், என்.ஆர்.ஐ. லே அவுட், விஜிபி லே அவுட், ராயல் என்கிளேவ், டீச்சர்ஸ் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.