- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, கே.கே. நகர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கிண்டி:
தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் 2வது பிரதான சாலை, டி.என்.ஜி.ஓ., ஜீவன் நகர், இந்திரா நகர், பி.எம். மருத்துவமனை புழுதிவாக்கம், திலகர் அவென்யூ, ஓட்டேரி சாலை, சுவாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, உள்ளகரம், ராஜேஸ்வரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
பல்லாவரம் தர்கா சாலை, பெருமாள் நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, ஹைவே நகர், சித்தலபாக்கம் மேடவாக்கம் ரைஸ் மில் சாலை, ஜெயச்சந்திரன் நகர், அண்ணாசாலை, ஜல்லடியன்பேட்டை, பத்மாவதி நகர், ராதா நகர் புதிய காலனி 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, சாஸ்த்ரி காலனி, சோல்வார் நகர், நேரு தெரு, நவமோனி தெரு மற்றும் கேஸ் கம்பெனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தண்டையார்பேட்டை:
மணலி கலைஞர் நகர், சி.பி.சி.எல். நகர், படசாலை, வைகாடு, 200 அடி சாலை மணலி, சடையங்குப்பம், பர்மா நகர், எலந்தனூர், பொன்னேரி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி நகர், எம்.எம்.டி.ஏ., ஆண்டார்குப்பம், வி.பி. நகர், சின்ன மாத்தூர் சாலை, மூலச்சத்திரம், பச்சையப்பன் கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கே.கே. நகர்:
கோடம்பாக்கம் கங்கை அம்மன் கோயில் தெரு மற்றும் சூளைமேடு நெடுஞ்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.