- Home
- Tamil Nadu News
- சென்னை
- தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! தேதி குறித்த வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! தேதி குறித்த வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 days chance of rain in Tamilnadu
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாகர்கோவில் அனைத்து இடங்களிலும் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் கொளுத்தியது.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கனமழை
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கோவை, தென்காசி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் விடாமல் கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை
மேலும் கனமழை காரணமாக கோவையில் உள்ள பில்லூர், சிறுவாணி அணைகளும் நிரம்பின. இந்நிலையில், தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக. 01-06-2025 மற்றும் 02-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03-06-2025 முதல் 07-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: 01-06-2025: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
02-06-2025: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்'' என்று கூறப்பட்டுள்ளது.