சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் லிப்ட் விபத்து! ஒருவர்! பலி நடந்தது என்ன?
Chennai Hyatt Regency Lift Accident: சென்னை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் லிப்ட் அறுந்து விழுந்ததில் ஷியாம் சுந்தர் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai hyatt regency
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் ஹயாத் பிரபல நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஒட்டலில் லிஃப்ட் பழுதடைந்து கிடந்தது. இதனை அப்புறத்திவிட்டு புதிய லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து, பெரியமேடு பழைய இரும்பு வியாபாரி அப்துல் காதர் என்பவர் அந்த லிஃப்டை அகற்றுவதற்காக, ஷியாம் சுந்தர்(34), வினோத் உள்ளிட்ட ஊழியர்களை நேற்று விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

Hyatt Regency Lift Accident
ஷியாம் சுந்தர் கீழே நின்று கொண்டிருந்தபோது, வினோத் உள்ளிட்டோர், மாடியில் இருந்து லிஃப்ட்டை கீழே இறக்கினர். அப்போது, எதிர்பாராத விதமாக, லிஃப்ட் அறுந்து, கீழே நின்று கொண்டிருந்த ஷியாம் சுந்தர் மீது விழுந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: புதுசா கார் வாங்க போறீங்களா? இனி பார்க்கிங் வசதியும் இருந்தால்தான் வாங்க முடியும்!
Police investigation
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த ஷியாம் சுந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அனுபவம் இல்லாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட பிறருக்கு மரணம் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் 2 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை! ரூ. 5 கோடி கடனால் டாக்டர் எடுத்த விபரீத முடிவு
Arrest
இந்நிலையில் தலைமை பொறியாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல நட்சத்திர ஓட்டலில் லிப்ட் அறந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.